பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

அப்பாத்துரையம் - 15

நூற்றாண்டுகளுடன் ஒன்று படுத்தியே கூறினர். இவ்வளவு பிற்பட்ட கால இலக்கியத்தையே அறிந்த அவர்கள் தமிழிலக்கியத்தின் பழமையைப் பற்றியும் பெருமையைப் பற்றியும் இவ்வளவு வானளாவப் புகழ்ந்தது இன்று வியப்புக்குரிய செய்தியாகத் தோன்றக்கூடும். ஆயினும் வரலாற்றடிப்படையில் பார்த்தால், இதில் வியப்புக்க இடமில்லை. ஏனெனில் இப்பிற்பட்ட காலத்தில் கூட இந்தியாவில் வேறு எந்தத் தாய் மொழியிலும் இலக்கிய வாடை இருந்ததில்லை. அது மட்டுமோ? பண்டை இலக்கிய மொழி எனப் புகழ்பெற்றுள்ள வட மொழியில் கூட இலக்கியம் தோன்றியதும் வளர்ந்ததும் இக்காலத்திலும் இதற்குப் பிற்பட்ட காலத்திலுமேதான். ஆகவே வடமொழி யிலக்கியத் துடன் தோன்றி அதனுடன் வளர்ச்சி யடைந்த சமகால இலக்கியம் என்ற சிறப்பு இக்காலத் தமிழிலக் கியத்திற்கு உண்டு என்னலாம்.

சங்க இலக்கிய அறிவு பரவாத நம் தந்தையர் காலத்துப் பழம் புலவர்களிடையே தலைசிறந்தவர்களுள் ஒருவர் அறிஞர் உ. வே. சாமிநாதனார். அக்காலத் தமிழ்ப் புலவர் புலமை யெல்லையை அவர்தம் அழகிய கட்டுரை ஒன்றில் தீட்டியுள்ளார். கல்லூரித் தலைமையாசிரியர் ஒருவர் அவர்தம் புலமையைப் பாராட்டியபின், அவரிடம் தாங்கள் சிலப்பதிகாரம் பயின்றிருக் கிறீர்களா?" என்று கேட்டாராம். "நான் அதன் பெயர் தானும் இது வரை கேட்டதில்லை” என்றாராம் புலவர். இதன்பின் அவரக்குத் தொன்னூல்களில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகவே ஆறுமுகநாவலர், எல்லப்ப நாவலர், பவானந்தம் பிள்ளை, சி. வை. தாமோதரம் பிள்ளை அகியவர்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரும் தொன்னூலேடுகளில் புதைந்துள்ள நாட்டுச் செல்வங்களை வெளியிடும் பணியில் ஈடுபடலாயினர். அதன் பிற்படத் தோன்றி இப்போது தழைத்தோங்கிவரும் தற்காலத் தமிழ் மறுமலர்ச்சி யூழியில் தான் சங்க இலக்கிய அறிவு புலவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் தோய்ந்து ஊறி ஆர்வமூட்டத் தொடங்கியுள்ளது.

சங்க இலக்கியம் பற்றிய கால ஆராய்ச்சி இப்போது கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட தென்னலாம் . இப்போது நமக்குக் கிட்டியுள்ள சங்க் இலக்கியத்தின் மிகப்பெரும் பகுதி கி.