பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

5

பி. 2. 3 ஆம் நூற்றாண்டுகளுக்குரியது. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என வகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியத்தில் அடங்காத சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களும் மற்றவற்றுடனொப்பச் சங்க காலத்தில் எழுதப்பட்டவையேயாகும்.திருக்குறள் கி.பி.2 ஆம் நூற்றாண்டுக்குக் குறைந்தது ஒன்றிரண்டு நூற்றாண்டுகட்கு முற்பட்டது. தொல்காப்பியம் திருக்குறளுக்கும் சில பல நூற்றாண்டுகள் முற்பட்டதாதல் வேண்டும். தவிரச் சங்கத் தொகைநூல்களில் நூல்கள் சிலவும் நூற்பகுதிகள் சிலவும்; சிறப்பாகப் புறநானூற்றுப் பகுதிகள் சிலவும் பரிபாடல் பகுதிகளும் முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாகவே இருத்தல் வேண்டும். சங்க காலத்திலும் பழமையுடைய இத்தொல் பழமை இலக்கியம் சங்க காலத்துக்கு முற்பட்ட இலக்கியப் பண்பாடுகளை விளக்க உதவுகின்றன.

கால ஆராய்ச்சியை யடுத்து இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத்தின் பின்னணியாக இலங்கும் நாகரிக ஆராய்ச்சி ஆகியவற்றில் இன்று புலவரும் ஆராய்ச்சியாளரும் முயன்று வருகின்றனர். சிந்துவெளிப் புதை பொருளாராய்ச்சி இவற்றுக்குப் பேரூக்கம் தருவதாயுள்ளது. பண்டைச் சிந்து வெளி நாகரிகத் துக்கும் தற்கால இந்திய நாகரிகத்துக்கும் இடையே காணப்படும் வகையில் இவ்விரண்டுடனும் தொடர்பற்ற வேத இதிகாச புராணங்கள் சிறிதும் உதவக் கூடாதவையா யிருக்கின்றன. சங்க இலக்கிய ஆராய்ச்சி இது வகையில் பேருதவி தந்துள்ளது. தருகிறது. இன்னும் பேருதவி தரக்கூடும்.

தேசிய இலக்கியம்

வரலாற்றாசிரியர்கள் காலப்பாகுபாட்டைப் பின்பற்றித் தமிழ் இலக்கிய வளர்ச்சிக் காலத்தை முப்பெரும் பிரிவு களாகப் பகுக்கலாம். அவை பண்டைக்காலம், இடைக்காலம், பிற்காலம் என்பவை. கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையுள்ள சங்க இலக்கியம் பண்டைக் காலத்தது. அதற்குப் பிற்பட்டுக் கம்பர் காலம் வரை அதாவது 12 ஆம் நூற்றாண்டு வரையுள்ள இலக்கியம் இடைக் காலத்தது. கம்பருக்குப் பிற்பட்ட இலக்கியம் பிற்கால இலக்கியம் ஆகும்.