பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

அப்பாத்துரையம் - 15

இவற்றுள் பண்டைக்கால இலக்கியமாகிய சங்க இலக்கியம் தமிழுக்குத் தனிப் பெருஞ் சிறப்பளிப்பதாகும். ஏனெனில், வேத உபநிடதங்கள் நீங்கலாக இந்தியாவில் எம்மொழியிலும் இக்காலத்தில் இலக்கிய வாழ்வு இருந்த தில்லை. இரண்டாங்காலமாகிய இடைக்காலத்திலும் வடமொழி இலக்கியம் தவிர வேறு இந்தியாவில் தமிழோ டொத்த இலக்கியம் இல்லை. வடமொழி, தென்மொழி என்ற பெயர்களுடன் வடமொழியும், தமிழ் மொழியும் போட்டி யிட்ட காலம் இதுவே. மூன்றாவது காலத்தில் வடமொழி இலக்கிய வாழ்வு வடநாட்டில் அழிந்துபட்டது. இந்தியா வெங்கும், சிறப்பாகத் தென்னிந்தியாவில், தாய்மொழி இலக்கியங்கள் தலையோங்கின. இக்காலத்தில் தான் பிற மொழிகள் தமிழுடன் இலக்கியப் போட்டிக்கு வந்தன.

பண்டைக்காலம், இடைக்காலம், பிற்காலம் ஆகிய இம்மூன்று காலங்களிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற இலக்கிய மொழி தமிழ் மட்டுமே என்பதையும், வடமொழியும் பிற மொழிகள் யாவும் மூன்று காலங்களுள் ஒரு கால அளவே வளர்ச்சியடைந்தன என்பதையும் இதன் மூலம் தெளிவுபடக் காணலாம், தேசவரலாற்றுடன் வளர்ச்சியடைந்த இத் தேசிய இலக்கியத்தின் தாயிலக்கியம் சங்க இலக்கியமே ஆகும்.

சங்க இலக்கியமும் பிற்காலத் தமிழிலக்கியமும்

பழங்கால ஆராய்ச்சிக்கும் தேச வளர்ச்சி வரலாற்றுக்கும் உதவுவதுடன் நில்லாது சங்க இலக்கியம் தமிழர்தம் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும்பயன் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று தமிழிலக்கியத்தின் எல்லையற்ற முழுப்பரப்பை யும் தமிழகம் உணர்ந்து போற்றவில்லை. அதன் எல்லையற்ற அளவே இதற்குத் தடையாகவும் உதவியுள்ளது. தமிழில் சைவ இலக்கியம், வைணவ இலக்கியம், சமண இலக்கியம் என்று பிரித்தால் கூட, கூட, ஒவ்வொரு சமய, இலக்கியமும் மற்ற மொழிகளின் முழு இலக்கியத்திற்கு அளவிலும் பெருமை யிலும் ஈடு கொடுக்கக்கூடியது. சைவரும் வைணவரும் பிறரும் கவனிக்காத வைதிகச் சார்பிலும் கூடப் பாடுதுறை போன்ற சிறந்த நூல்கள் உள்ளன.

ரு

வை தவிரக் கால, தேச, கொள்கை