பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

அப்பாத்துரையம் - 15

வ்விரண்டு காலங்களுக்குமிடையே ஓர் இருண்ட இடைக் காலம் கி. பி. 3 ம் 4ஆம் நூற்றாண்டுகளில் நிலவி யிருந்த தென்று வரலாற்றாராய்ச்சியாளர் எடுத்துக் காட்டுகின்றனர். தென்னாட்டிலுள்ள இவ்விருண்ட இடைக்காலத்தைப்போலவே வட நாட்டிலும் கிட்டத்தட்ட இதே 3 ஆம் நூற்றாண்டில் ஓர் இருண்ட இடைக்காலம் இருந்தது என்பதை வரலாற்று மாணவர் கவனித்தல் வேண்டும். இவ்விருண்ட இடைக்காலமே வடநாட்டில் புராணகாலமாகும். காலப்போக்கில் வளர்ந்துவந்த இதிகாச புராண சுமிருதி முதலிய பல ‘காலங்கடந்த’ நூல்கள் ன்றைய நிலையில் உருவாக்கப்பட்ட காலம் இதுவே.

தென்னாட்டில் இருண்ட இடை க்காலத்தில் ஏற்பட்ட அழிவுக்குப் பின் பழைய சங்ககால வாழ்வின் பின்னணியான நாகரிகம் சிதைந்தொழிந்து ஒரு புதிய வாழ்வு தொடங்கி யதன்றோ? அதுபோலவே வட நாட்டிலும் இவ்விருண்ட காலத்தின் முன்னிருந்த நாகரிகமும் நிலையும் மாறின. பெரும்பாலும் புத்த சமணச் சார்பானபாளி, அர்த்தமாக முதலிய பண்டைத் தாய்மொழி வாழ்வுகள் அழிந்து புதிய வடமொழி இலக்கிய வாழ்வு இதன்பின் தொடங்கிற்று. இருண்ட காலத்துக்கு முன் வடவர் மொழி வடமொழியாகவில்லை. இலக்கியமும் தோன்றவில்லை.

தாயும் சேயும்

சங்க காலத் தமிழிலக்கியமும் பிற்காலத் தமிழிலக்கிய மும் ஒரே மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. ஒன்று தாய், மற்றொன்று பிள்ளை என்ற உறவும் அவற்றிடையே உண்டு. தாயின் சாயல் பிள்ளையிடத்தில் ஆங்காங்கே காணப்படுவதும், தாயின் பாசம் பிள்ளையிடத்தில் ஓரளவு நிலவுவதும் இயல்பே. ஆனால் பிற்காலத் தமிழிலக்கியம் தாயின் அறிவுவளமும் செல்வளமும் இழந்து தாயின் தன்னாண்மை நிலையும் விடுதலை யார்வமும் இல்லாத பிள்ளை போலவே காட்சியளிக்கிறது. எனவே மொழியாலும் வரன்முறையாலும் இவ்விரண் டிலக்கியங்களும் ஒன்றானாலும், தன்மையில், தரத்தில், பண்பாட்டில் இவையிரண்டும் இரு வேறுபட்ட இலக்கியங்களே யாகும். தாய் செல்வச் சீமாட்டி; மகள் பஞ்சைப் பன்னாடை. தாய் குப்பையில் வீசியெறிந்த வீசியெறிந்த மணிகள் மகளின் ஒப்பற்ற

ம்