பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

இந்தியாவின் இலக்கியத் தலையூற்று

அப்பாத்துரையம் - 15

சங்க இலக்கிய நூல்களை ஒரு புறமும் இடைக்கால, பிற் காலத் தமிழிலக்கியத்தையும் வடமொழி இலக்கியத்தையும் மற்றொரு புறமும் வைத்துஆராய்ந்தால், வடமொழி இலக்கியம் பெரும்பாலும் இடைக்காலத் தமிழிலக்கியத்தை ஒத்தும் முற்காலச் சங்க இலக்கியத்திலிருந்து மாறுபட்டும் இருப்பது காணலாம். தமிழிலக்கியம் ஆங்காங்குச் சங்க இலக்கியத்தை நேரிடையாக மேற்கோள் காட்டுவது போல வடமொழியிலக்கியம் காட்டுவதில்லை. ஆனால் தமிழிலக்கிய நூ ல்கள் சங்க நூல் உரைகளையும் கருத்துக்களையும் மேற்கொண்டு புதுக்குவது போலவே வடமொழி நூல்களும் புதுக்குவது காணலாம். புராணகாலக் கதம்ப நூல்களான இதிகாச புராண சுமிருதிகளிலும் வடமொழி இலக்கிய நூல்களிலும் சங்க இலக்கிய நூல்களின் சொற்கள், சொற் றொடர்கள், கருத்துக்கள், முழுப்பாடல்கள், பாடற் பகுதிகள் ஆகியவை ஒத்துவிளங்குகின்றன என்பதைப் பல வட டமொழி அறிஞரே எடுத்துக் காட்டியுள்ளனர். சங்ககால நாகரிகத்திற் குறைபட்ட பிற்காலத் தமிழிலக்கிய ஆசிரியரைப்போலவே, வடமொழி இலக்கியத்தாரும் சங்கத் தமிழால் திறம்படக் கூறியதை விரித்தும் புதுக்கியும் குழைத்தும்; சிலவிடங்களில் வழுக்கியும், பலவிடங்களில் தெளிவு காணாது முரண் பட்டும் பகர்ந்துள்ளனர் என்பது காணலாம். இவற்றால் சங்க இலக்கியம் தமிழிலக்கியத்துக்குமட்டும் தலையூற்றன்று. இடைக்காலத்தது ஆன வடமொழி இலக்கியத்துக்கும் பிற பிற்காலத் தாய்மொழி இலக்கியங்களுக்கும் கூட அதுவே தலையூற்றாகும் என்பது தெரிய வரும்.

தமிழிலக்கியம் சங்க இலக்கியத்தைப் பின்பற்றுவது இயல்பு. வடமொழி இலக்கியம் அங்ஙனம் பின்பற்றியது என்று கூறுதல் பொருந்துமா என்று பலர் மலைவுறலாம். ஆனால் மூன்று இலக்கியங்களையும் ஒப்பிட்டால் தமிழிலக்கியத்தை விட வடமொழி இலக்கியத்தின் சங்க இலக்கியச் சார்பு நன்கு தெளியக் கூடியதாகவே இருக்கிறதென்று காணலாம். தமிழில் சங்க இலக்கியத்துக்கு முற்பட்டே முத்தமிழிலக்கண இலக்கிய மரபு உண்டு. வடமொழியில் புராணகாலத்துக்கு முற்பட்ட இலக்கிய மரபு ல்லை. வால்மீகியே வடமொழியின் ஆதிகவி