பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

11

என்று கூறப்படுவது இதனாலேயேயாகும். மேலும் தமிழிலக்கியத் தார் சங்க இலக்கியத்தைப் பின்பற்றிய இடங்களிலுள்ள, முரண்பாடுகளை விட வடமொழியாளர்கள் பின்பற்றிய இடங்களிலுள்ள முரண்பாடுகள் மிகுதி. புராணகால நூல்கள் பலர் பல காலத்தில பலபட எழுதிய கதம்ப நூல்களாதலால் தமிழில் பல நூல்களின் கருத்துக்களையும் தம் கருத்துக்களையும் ஒருங்கே ஒரே நூலில் கூறி முரண்பாடுகளை வளர்த்தனர்.

காலத் தொடர்பும் இம் முரண்பாடும் கண்டும் தெய்வ மொழியாகிய வடமொழி தமிழைப் பின்பற்றுமோ என்று ஐயுறுபவர்க்குப் பைசாசமொழியிலிருந்து பெருங்கதையை யும் புத்த சாதகக் கதைகளிலிருந்து பஞ்ச தந்திரத்தையும் அவர்கள் உருவாக்கியதை எடுத்துக் காட்டலாம். யவன (கிரேக்க)ரிடமிருந்து வான நூல்களை மேற்கொண்டதும் கவனிக்கத்தக்கது. மற்றும் தமிழகம் பற்றிய அவர்கள் ஆர்வத்தை நேரிடையாகவும் காட்டலாம். தொடக்கக்காலக் கவிஞனாகிய காளிதாசன் காலத்திலிருந்தே வடமொழி யாளர் கவிதையில் தென்றல் மலயவாதம் என்றும் சந்தனம் மலயஜம் என்றும் வழங்கலாயின. தொடக்கக் காலத்தி லிருந்தே வடமொழி இலக்கியத் தலைமை நிலையால் காஞ்சி இந்தியாவின் தலைசிறந்த சமய, கலைத்தலைநகராக விளங்கியதும் குறிப்பிடத் தக்கது.

சங்க இலக்கியம் மட்டுமன்றிப் பிற்கால இலக்கியத்தைக் கூட வடமொழியாளர் பின்பற்றத் தயங்கவில்லை. 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வடமொழிப் புலவர் தமிழின் எதுகை மோனைகளை வடமொழியில் மேற்கொண்டனர்.இதே காலத்தில் தான் பழைய பொருளிலக்கணத்தின பகுதியான செய்யுளணிப் பகுதிகளும் அகப் பொருளிலக்கணங்களும் தமிழில் தனிப்பட்ட முழு இலக்கணங்களாக விரிக்கப்பட்டன. இவற்றையும் பக்திப் பாடல்களாகிய தாண்டகங்களையும் பாசுரங்களையும் சந்தப் பாடல்களையும் வடமொழியாளர் பின்பற்றினர். காலமும் பின் தாடர்பு கவனியாது தமிழர் இவற்றை வடமொழியிலிருந்து மேற்கொண்டதாக இதுகாறும் புலவர் கருதி வருகின்றனர். இது தவறு. வடமொழியிலும் தாய்மொழிகளிலும் ஏற்பட்ட இலக்கிய அலைகளும் இயக்கங்களும் பெரும்பாலும் தமிழிலிருந்து