பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

அப்பாத்துரையம் - 15

தோற்றினும் உடனடியாக இந்தியா முழுவதும் விரைந்து பரந்ததே இம்மயக்க உணர்வுக்குக் காரணம். சமயத்துறையில் பக்தியியக்கம், மொழித்துறையில் மணிபவள நடை (தாய்மொழி வடமொழிக் கலப்பு) ஆகியவை இத்தகைய அனைத்திந்திய இயக்கங்களுட் சில.

ஐந்திணை மரபு

தமிழிலக்கியமும் வடமொழி இலக்கியமும் சங்க இலக்கியத்தைப் பேரளவு பின்பற்றினவாயினும் சங்க இலக்கியத்தின் பல சிறப்புக்களை அவை பின்பற்றவோ மேற் கொள்ளவோ முடியவில்லை. இது காலதேச மாறுபாடுகளின் பயன் என்பதில் ஐயமில்லை. வடமொழி இலக்கியத்தின் புகழ் இந்தியாவெங்கும் பரவியிருந்த காலமாகிய தாய் மொழி இலக்கிய காலத்தில்கூட வடமொழியிலக்கியத்தின் தலைசிறந்த துறையாகிய நாடகம் எம்மொழியிலும் பின்பற்றப்படவில்லை. இதன் காரணம் வடமொழி இலக்கிய கால நாகரிகம் அதன்பின் மேலும் கெட்டதேயாகும். இதுபோலவே தமிழகத்தில் சங்ககாலத்தில் வாங்கிய ஐந்திணைமரவும் அகப்புறப்பொருள் துறைமரபுகளும் தமிழ் நாட்டிலேயே நாகரிகச் சீர்கேட்டினால் நன்கு உணரப்படாமல் வரவர நலிவுற்றன. வடமொழியாளரும் அணியிலக்கணத்தையும் பக்தி யிலக்கியத்தையும் மேற்கொண்டது போல் அவற்றை மேற் கொள்ளவில்லை.

ஐந்தினை மரபின் நுணுக்க விவரங்களை அதற்குரிய துறைச் சொற்களுடன் புலவர் விளக்குவதுண்டு. ஆனால் மாணவரும் பாது மக்களும் அச்சொற் காட்டிடையே எத்தகைய சிறப்பையும் காணமாட்டாமல் இது தமிழ்ப் புலவர்களின் திறமையைக் காட்டும் ஒரு பொறியெனக் கருதியிருக்கின்றனர். இதில் வியப்பில்லை. இன்றைய மேனாட்டு விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெறாது போகுமானால் விஞ்ஞான நூல்களைப் பயின்ற ஒருவன் அவற்றிற் கண்ட செய்திகளை ஒப்பிக்கத் தொடங்கினால் விஞ்ஞான மாணவரல்லாத பிறர் இது போன்றே மயக்கங்கொள்வர். கிரேக்க இலக்கியத்தின் அறிவு மக்களிடையே மறைந்து போன பிறகு ஐரோப்பாவில் இடையிரு காலமாகிய கி.பி.500 முதல் 1600 வரை ஆயிர ஆண்டுகளாக அது பெயரளவில் மதிக்கப்பட்டே வந்தாலும் அதன் சிறப்புக்கள்