பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

13

உணரப்படாமலிருந்தது என்பது காணலாம். இவற்றைப்போலவே தான் சங்க இலக்கியச் சிறப்பும் ஐந்திணை மரபுச் சிறப்பும் பெயரளவில் புலவரால் மதிக்கப் படுகிறதாயினும் இன் றளவும் தமிழ்ப் புலவராலோ பிற நாட்டாராய்ச்சி யாளராலோ அவற்றின் இயல்புகள் உணரப்படவில்லை என்று கூறுவது மிகையாகாது.

ஐந்திணை மரபின் அடிப்படையாவது, கலைஞன் இயற்கையையும் வாழ்வையும் ஆய்ந்துணர்ந்து அவற்றுக்குப் பிழைபடாமல் கலை தீட்டவேண்டும் என்பதாம். ஒருவன் கலைஞன் என்ற காரணத்துக்காகக் காலையில் பூக்கும் மலரை மாலையில் பூப்பதாக, இரவில் பூக்கும் மலரை பகலில் பூப்பதாகக் கூறலாமா? உழவன் வாழ்வைச் சித்தரிக்கும்போது பொன்னும் மணியும் உவமையிலும் வர்ணனையிலும் கலந்து மன்னன் வாழ்வில் கந்தைகூளங்களை உவமை கூறலாமா? கூறின் அதை அருவருப்பு (ரசாபாசம்) என்று கொள்ளத்தானே செய்வோம்! கலை காட்டுப்பூ அல்ல; பண்பட்ட அறிவிற் பூத்த தோட்டமலரேயாகும். தோட்டக்காரன் தோட்டத்தொழில் திறத்துக்கும் அறிவுக்கும் ஏற்ப அவன் இடும் நல் உரத்துக்கேற்ப மலர்கள் மணமும் அழகும் புதுமையும் பெறும். அது போலவே இலக்கியங்களினிடையே சங்க இலக்கியக் கவிதை மலர் பண்பட்ட சங்கப் புலவர் அறிவுக்கு இலக்காய்த் திகழ்கின்றது.

கிரேக்க இலக்கியத்தின் தனிச் சிறப்புக்களுள் ஒன்றாகிய முல்லைப் பாடல் முல்லைநில வாழ்க்கையின் முதற்பொருள் (இயற்கைச் சூழ்நிலை) கருப்பொருள் (இயற்கைவளம்) உரிப்பொருள் (வாழ்க்கைநிலை) ஆகியவை வழுவாது கூறும் புது இயல்புடையது. மேனாட்டிலக்கிய முழுதும் இது உயர்வாகப்பேணப் பட்டும் பின்பற்றப்பட்டு முள்ளது. இதன் தூய கலையுணர்வு கிரேக்க நாகரிகத்தின் தனிப் பெருஞ்சிறப்பைக் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. வெறும் புலமைப் பொறியாகக் கொள்ளப்படுவதில்லை. கிரேக்கரிடையே முல்லை நிலக் கவிஞர்கள் காட்டிய இதே உயர்நெறியைத் தமிழர் எல்லா நிலங்களின் வாழ்விலும் காட்டினர். காட்டினர். முல்லை நிலக்கவிஞன் முல்லை நில உவமைகளையும் வாழ்க்கைப்