பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம் - 15

பண்புகளையும் குறித்தது போலவே, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலிநிலக் கவிஞர்களும் அவ்வந் நிலங்களின் வாழ்க்கையைச் சித்தரித்தனர். இத் திணைமரபாகிய இயற்கைப் படப் பிடிப்புக்குத் தனித் தமிழ்ச் சங்க இலக்கியமே உலகின் தலையாய முன்மாதிரியாகும். கிரேக்க முல்லைத்திணை யிலக்கியத்தை 1000 ஆண்டுகட்குப் பின் கண்டு அதனால் மறுமலர்ச்சியுற்ற மேலையுலகு, தமிழரின் முழுத் திணை இலக்கியத்தின் உயர்வு காணில், இன்னும் பாரிய மறுமலர்ச்சிப் புரட்சிக்கு ஆளாகும் என்று நான் எண்ணுகிறேன்.

வரலாற்று வாய்மையும் விஞ்ஞான வாய்மையும்

திணை மரபுச் சிறப்பு வருங்கால இலக்கியச் சுவை ஞர்கள் கண்டு கூறவேண்டிய ஒன்று. ஆனால் இன்றே காணக் கூடிய இருபண்புகள் வரலாற்று வாய்மையும் விஞ்ஞான வாய்மையும் ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழகம் இருந்த நிலைமையை அதுபடம் பிடித்துக் காட்டுகிறது. அத்துடனாக, ரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்ட இந்தியாவின் படத்தைத் தேடுபவர்க்கு அதுவே வரலாற்றுக்குரிய இலக்கியமாயிருக்கிறது. ஏனெனில் வடமொழி இலக்கியத்தைப் போலவும் பிறமொழி இலக்கியங்களைப் போலவும், பிற்காலத்துத் தமிழிலக்கியத்தைப் போலவும் அது ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு மனிதனைப்பற்றி ஏதோ ஒரு புலவர் தன் கற்பனைத் திறனால் கண்ட காட்சியைக் கூறவில்லை. இதே தமிழ் நாட்டில் இதே இந்திய உபகண்டப்பகுதியில் ஆண்ட அரசர், சிற்றரசர்,புரவலர், மக்கள், மக்கள் வாழ்க்கை ஆகியவைபற்றி, அதே தமிழ்நாட்டுப்புலவர் சிலர் கண்டதும் கேட்டதும் எண்ணியதுமே இவ்விலக்கியத்தில் குறிக்கப்படுகின்றன. நம்பிக்கையூட்டத்தக்க வரலாற்று வாய்மையுடைய இவ்விலக்கியம் இதிகாசம் புராணங்கள் அல்லது கற்பனைக் காவியங்கள் போலன்றித் தேசவரலாற்றுக்குப்பேருதவி புரியவல்லது.. அது மட்டுமா! பிறநாடுகளின் இலக்கியங்கள் பெரிதும் அரசனையும் பெருமக்களையும் சார்ந்தன. தமிழ்ச் சங்க இலக்கியமோ அரசரையும் பெருமக்களையும் மட்டுமன்றிப் பல திணை நிலமக்கள், பல வகுப்பினர் வாழ்க்கைகளையும் கருத்துக் களையும் சித்தரிப்பது. தற்கால இந்திய வாழ்க்கை