பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

15

வரலாற்றுக்கும் மொகஞ்சதரோ வாழ்க்கைக்கும் இடையே யுள்ள தேசிய இலக்கியப் பாலம் இச்சங்க இலக்கிமொன்றே. இந்திய மக்கள் வாழ்க்கை, மொழி வளர்ச்சி ஆகியவற்றினை ஆராய்பவர்க்கு இது இன்றியமையா இலக்கியம் மட்டமன்று. ஒரே இலக்கியமாக மிளிர்வதாகும்.

வரலாற்றைப்போலவே தற்கால விஞ்ஞான அறிவுக்குக் கூடச் சங்க இலக்கியம் மிகவும் பயன்படுவதென்பதை இன்றைய புலவருலகும் மாணவருலகும் கவனியாதிருக்கின்றது. நாட்டின் அக்கால வாழ்க்கை நிலையை அறிய விரும்புபவனுக்கு மட்டுமன்றி அக்காலத்தவர் அறிந்திருந்த நாட்டச் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், பொருள்கள், ஆகிய வற்றையும் அவற்றின் பண்பு களையும் சங்க இலக்கிய மூலம் அறியலாம். இயற்கையிலில்லாத உயிர்கள் செடிவகைகளையும், பொருந்தாப் பழங்கதைப் பண்புகளையும் நாம்சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் காண்பதில்லை. யாரும் காணாத பாலும் நீரும் பிரிக்கும் அன்னம், யானைகளை அச்சுறுத்திக் கொல்லும் சிங்கம், வெயிலும் காற்றும் உண்ணும் உயிரினங்கள், யானை முகமுடைய சிங்கங்கள், சிங்கமுக மனிதர்கள், சிறகுடைய சிங்கங்கள் ஆகியவற்றை இங்கே காணமாட்டோம்.அத்துடன் காணும் செடிகளிலும் சங்கப் புலவர் பாடுங்கிளி, பச்சையிலை எனப்பொதுப் பண்புகள் கூறிஇடம் அடைப்பதில்லை.அவ்வவ் உயிர்கள் பொருள்களின் தனிச் சிறப்புப் பண்புகளையே குறித்தனர். பாலை நிலச் செடிகளின் இலையற்ற பால்செறிந்த தன்மை, நீர்வாழ் கொடி களின் இலைகளின் அடிப்புறக் கருமை, இலைகளின் வடிவங்கள், காயா மரம், பூவாச்செடி, பறவைகளின் சிறப்புப் பண்புகள் ஆகியவற்றையே அடைமொழியாகக் கூறிச் சங்கப் புலவர் அழகுக்கலையியலும் அறிவுத் திறத்தையும் பயனையும் தருவர். அவர்கள் கவிதை அறிவியல் திறம் குன்றாத காலத்தில் அறிவியலின் பயனாய் விளைந்தது. இங்கிலாந்தில் டெனிஸன் கவிதையில் காணும் அறிவியல் வாய்மையையும் ய்ரௌனிங் கவிதையில் காணும் வரலாற்று நோக்கையும் மெய்விளக்க (Philosophy) வாய்மையையும் ஸ்காந்தினேவிய ரஷிய இலக்கியங் களில் காணும் வாழ்க்கை வாய்மையையும் ஃபிரஞ்சு, கிரேக்க இலக்கியங்களின் கட்டமைப்புக் கலையாண்மையையும் சங்க இலக்கியத்தில் ஒருங்கே காணலாம்.