பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அப்பாத்துரையம் - 15

தமிழர் நாடகப்பண்பும் உலகின் நாடக இலக்கியமும்

சங்க இலக்கியத்தால் இந்திய நாகரிகத்துக்கும் சிறப்பாக வடமொழியிலக்கியத்துக்கும் பயன்படக் கூடிய மற்றொரு துறையுண்டு. வடமொழியிலக்கியத்தின் தலைசிறந்த துறைகள் ரண்டு. ஒன்று அணியியல், செய்யுளியல் நூல்கள். மற்றொன்று நாடக இலக்கியம். முன்னது சங்க காலத்துக்கு முற்பட்ட தொல்காப்பியத்தின் பொருளதிகாரப் பகுதியிலிருந்து தமிழகத்தில் வளர்ந்த 7ஆம்நூற்றாண்டில் தமிழில் விரிவடைத்து. அது போலவே வடமொழியிலும் இது விரிவு பெற்றது. தமிழில் 12ஆம் நூற்றாண்டுக்குப்பின் இது சிறப்புறவில்லை. ஆனால் வடமொழியில் 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்து வளர்ச்சி யடைந்தது. ஆயினும் இதற்குத் தோற்ற முதல்நிலமாய் விளங்கியதும் தமிழகமே; இதன் வளர்ச்சியில் தொடர்ந்து முதல் இடம் வகித்ததும் தமிழகமே யாகும். நாடகத் துறையோவெனில் தமிழில் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் வளர்ச்சியடையாமல் வடமொழியில் பெருக வளர்ச்சி யடைந்தது. இன்று உலகில் ஆங்கில நாடு, ஸ்காந்தினேவியா, ஃபிரான்சு, கிரேக்கம் ஆகிய நாடுகளின் நாடகங்களுடன் இணையான சிறப்புடையதாக வட வடமொழி நாடக இலக்கியம் விளங்குகிறது இவற்றுள் பழமை மிக்க நாடகப் பண்புடையவை கிரேக்க நாடகமும் வடமொழி நாடகமுமே.

தமிழில் நாடகங்களில்லாமலிருப்பதால் வடமொழி நாடகத்தின் சிறப்புக்கும் தமிழுக்கும் தொடர்பு இருக்க முடியாதென்றே எவரும் கருதக்கூடும். ஆனால் இன்று உலக மக்கள் இலக்கியம் என்று கூறுவதனை 'இயல்' என்றஒரு துறையாக்கி, உலகத்தார் இலக்கியம் என்று கருதாது தனித் துறைக் கலையாகக் கொண்ட இசையை மற்றொரு துறை யாக்கி, நாடகத்தை இவற்றுடனொத்த மூன்றாம் துறையாகக் கொண்டு முத்தமிழ்த் துறை வகுத்த மக்கள் உலகில் தமிழரன்றி வேறுயாரும் இல்லை. இம்முத்தமிழிலக்கிய இலக்கணப்பகுப்பின் பெயரை மட்டுமே இடைக்கால பிற் காலங்களில் கேட்கிறோம். சங்க காலத்தில் இசை நாடகம் ஆகியவற்றின் சில சின்னங்களையும் சிலப்பதிகாரம் எனும் நாடக நூற் பகுதி ஒன்றனையுமே காண்கிறோம். எனவே

சை