பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

17

போலவே நாடகம் தழைத்திருந்த காலம் சங்க காலத்துக்கு முற்பட்டிருந்த காலம் என்பதில் ஐயமில்லை. இவ்வளவு தொல்பழங்காலத்திய உலக நாடக வழக்கை அறிய இன்று நமக்கு உதவியாயிருப்பது சங்க காலச் சிலப்பதிகாரமம் கிரேக்க நாடகமும் மட்டுமே, தமிழ் நாடக முறையையும் கிரேக்க நாடக முறையையும் ஒப்பிடுவோருக்கு அவற்றில் மிக நெருங்கிய ஒற்றுமைகள் பல இருப்பது தெரியவரும்.

தமிழின் முத்தமிழ்க்கால அதாவது சங்கத்துக்கு முந்தியகால நாடக இலக்கியத்தின் எஞ்சிய மிச்சம் சிலப்பதிகாரத்திலேயே கூறப்படும் சாக்கியார் கூத்து என்ற நாடகம்.சிலப்பதிகாரத்தில் சேரமன்னன் முன் நடித்ததாகக் கூறப்படும் அஃதே பறவூர்க் சாக்கையர் குடியினரால் இன் றளவும் மலையாளத்தில் ஆடப்பட்டு வருகிறது. மலையாள நாட்டின் புகழ்மிக்க கண்ணனாட்டம், இராமனாட்டம், ஒட்டந்துள்ளல் முதலிய நாடகத் துறைகள் இதன் கிளைகளும் பிற்கால வளர்ச்சிகளுமேயாகும். இவற்றுள் கண்ணனாட்டம் வடமொழியில் எழுதப்பட்டு நம்பூதிரிகளால் வளர்க்கப்பட்டது. வடமொழி நாடகங்கள் வடநாட்டிலும் தென்னாட்டில் புதிது புதிதாக வளர்ச்சி பெற்றதை நோக்க இரண்டும் தொடர்புடையவை என்று கூறவேண்டியுள்ளது. வடமொழி நாடகத்துக்குக் கிரேக்க நாடகப்பண்பே முன் மாதிரி என்று இன்று பலர் கருதுகின்றனர். ஆயினும் “உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்" என்ற நாடக வழக்கம், கிட்டத்தட்ட கிரேக்க நாடக மரபுக் கொத்த நாடக மரபும் தமிழ் நாடகத்தின் பண்பில் காணப்படுவதை நோக்க, வடமொழி நாடகம் தமிழ் நாடகமாகிய நிலத்தில் முளைத்து மலையாள நாட்டு நாடக மரபாகியகொடியில் மலர்ந்த பூங்கொத்தே என்று நினைக்க இடமுண்டு.

மிகுதியாகத்

ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலிய சிறு தொகைப் பாடல்களிலும் பத்துப்பாட்டு, அகநானூறு முதலிய நெடுந் தொகைகளிலும் உள்ள பல பாடல்களும் அகப்புறத்துறைப் பாடல்களும், பிற்காலத் துறைப்பாடல்களாகிய தூது, உலா முதலிய பிரபந்தங்களும் உண்மையில் சிலப்பதிகார மரபில் எழுந்த ஓரங்க, ஒரு நடிகர் நாடகங்களே என்னலாம். இவை