பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் - 15

டெனிஸனின் யுலிஸிஸ்போன்ற தனியுரை நாடகங்கள் (Monologues) என்பதை ஒப்புமையால் காணலாம். இத்தகைய தனியுரைநாடகங்களிலிருந்தே பிற்கால நாடகம் தோன்றியது என்பதனாலேயே வடமொழி நாடகத்தில் இறுதிவரை சூத்திரதாரர், பிரஸ்தாவனா முதலிய ‘கதைகூறும்'பகுதிகள்- தொடர்ந்திருந்தன. இவை தமிழின் உரைப்பாட்டு மடையை நினைவூட்டுவன.

சங்ககால இலக்கிய நாகரிகம்

சங்க இலக்கியங்கண்ட தமிழகம் இன்றைய தமிழகத் தினும் மிக உயர்ந்த நாகரிகமுடையது என்பதை அதில் சிறிது பயின்ற மாணவர் கூடக் காணக்கூடும். தமிழர் அன்று வெறும் உழவர்களும் நாட்டுப் புறத்தாரும் அல்லர். வாணிகமும் பல் தொழில் வளமும் வாய்ந்த நாடு நகர வாழ்வு உடையவர்கள். அவர்கள் நாகரிகம் நாட்டுப்புறச் சார்பானதன்று. சிறப்பாக நகரச் சார்பானது என்பதை நாகரிகம் என்ற சொல்லே காட்டும். அவர்கள் இசைக் கருவிகள் இன்றைய தமிழர் இசைக் கருவிகளையும் பிறநாட்டினர் இசைக் கருவிகளையும் விடப் பல. அவர்கள் உடுத்த உடைவகைகள், அவர்கள் பெண்டிர் ஒப்பனைக்குப் பயன் படுத்திய வகைவகை நறுஞ்சுண்ணங்கள், நலம்புனை வண்ணங்கள் ஆகியவையும் இக்கால மேனாட்டு நகர மக்களையும் நாண வைக்கு மளவு பலப்பல.

ய உ

அரசியலிலும்

கலை

பொருளியல் வாழ்விலும் வாழ்விலும் தமிழன் இன்றிருப்பதுபோல, இடைக் காலத்தி லிருந்தது போலக் கூட, அடிமைத்தனத்தில் தோய்ந்திருக்க வில்லை. இன்று தமிழகம் இந்திய உபகண்டத்திலேயே பிற்பட்டு இருக்கிறது. இடைக்காலத்தில், கம்பர் காலத்தில், அப்பர் காலத்தில் தமிழன் அரசியலில் முற்பட்டிருந்தான். ஆனால் கலையில், சமயத்துறையில் சமூகத்தில் அடிமைப் பண்புக்கு இடங்கொடுத்திருந்தான். சங்ககாலத்தில் எல்லாத் துறைகளிலும் தமிழன் முற்பட்டேயிருந்தான். தமிழக வேளிர்கள் பிறநாட்டினருக்கு மட்டுமின்றித் தம் நாட்டரசர்க்குக் கூட வணங்க மறுத்தார்கள். பாரி, அதியமான், ஓரி முதலியோர் சேர சோழ பாண்டியருடன் போட்டியிட்டனர். புலவர்கள் அரசுக் கரசு நட்பாடித் தனி உயர் வாழ்வு வாழ்ந்தனர். இலக்கியம்