பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

19

வாழ்விடையே மலர்ந்தது நாட்டு வாழ்வில் வளர்ந்தது. அதுவேறு எந்த இலக்கியத்துக்கும் நாகரிகத்துக்கும் தலைவணங்கவில்லை. பொருளியல் துறையிலோ தமிழன் செல்வம் எங்கும் போகவில்லை. அவன் தொழில், வாணிகவளங்களால் உலகின் செல்வமுழுவதும், உரோமாபுரிப் பொற்காசுகளாக, கிரேக்கர் வெள்ளி பொன் கோப்பைகளாக, மதுபுட்டிகளாக, சோனகர் (அராபிய) குதிரைகளாக, துருக்கிய யவனர் மணப் பொருள் களாக, இமயவர் வெண்கவரிகளாக, ஈழத்தார் மாணிக்கங்களாக அவனிடம் வந்து குவிந்தன.

கல்வி

கல்வியில், இலக்கியத்தில் சங்ககாலத் தமிழன் நிலை இன்றைய இந்தியாவையும் இடைக்கால இந்தியாவையும் மட்டுமின்றி இன்றைய மேனாடுகளையும் தலைகுனிய வைப்பதாகும். அறிவியல் நூல்களை மேனாடுகளிலிருந்து மொழி பெயர்க்க முற்படும் இன்றைய இந்தியாவின் நிலையில் ஒரு நூற்றாண்டில் ஏற்படும் நல்லிலக்கியத்தையும் புலவர் தொகையையும் பெண் புலவர் தொகையையும் அளவுகோலாக வைத்துப் பாருங்கள். கம்பர், அப்பர் காலத்துடன் இதனை ஒப்பிட்டால் இலக்கிய அளவு, புலவர் தொகை, பெண் புலவர் தொகை அந்நாள் மிகுதி என்பது காணலாம். கம்பராமாயணம் போன்ற, தேவாரம் போன்ற கவிதை நூல்கள் அன்று புலவர் நூல்களாய் இயங்கவில்லை. சமயப் பிரசார வெளியீடுகளாகவே இயங்கின. அதுவும் அச்சில்லாத காலத்தில் 1000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் கல்வி நிலை இது. இன்னும் 1000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்க காலத்தை இவ்விரண்டு காலத்துடனும் ஒப்பிடுங்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்குள் ஏற்பட்ட இலக்கியத்தில் சங்கம் இருந்தாய்ந்து பொறுக்கியெடுத்த சில புலவர்களின் சில நூல்களின் சில பகுதிகளே தொகுத்து வைக்கப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியே இன்று மீந்துள்ளது. அதில் நமக்கு 500 க்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்கள் உள்ளன. அவையும் எத்தகைய உயரிய பாடல்கள்! எது மேல் எது கீழ் என்று கூறமுடியாதபடி எல்லாம் ஒத்த மணிகளாகப் பொறுக்கியெடுக்கப்பட்ட திறன்தான் என்னே! இரண்டு நூற்றாண்டு அதாவது நாலைந்து தலைமறைக்குள் பொறுக்கி