பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 15

20 யெடுத்த புலவர்களில் எஞ்சியவர் தொகை ஐந்நூறு, அதில் எல்லா மரபினர்களும், எல்லாத் தொழிலினரும், எல்லாத் தமிழக மாவட்டத்தினரும் உள்ளனர்! பெண்கள் முப்பதுக்கு மேற்பட்டவர். தலைசிறந்த தமிழ்ப் பெரும் புலவர் ஔவையார் முதலாக அவர் பாடலுக்கு ஒப்பாகப் பாடியவரே அத்தனை பேரும். அதிலும் எத்தனை மரபினர் - எயினர், பேய்மகள் முதலியோர் உள்ளனர். இத்தனை பெண் புலவர் இத்தனை சிறந்த புலமையுடையவர் உலகின் வேறு எந்த மொழி யிலக்கியத்திலும் காணமுடியாது. தமிழகத்திலோ இத்தனை யும் இரண்டுநூற்றாண்டுக்குள்! தமிழகத்தின் கல்விநிலை அன்றிருந்தவாறு என்னே!

புலவர்களின் உயர்வு தாழ்வு காட்ட அக்காலத்தில் வேறுவழியில்லை போலும்! பெரும் புலவர் என்று காட்ட அவர்கள் பாடல் தொகைதான் பத்து, நூற்றுக் கணக்காகத் தரப்பட்டன. ஷேக்ஸ்பியர் கால இங்கிலாந்தில் “பறக்கும் பறவை எதனிடையேயும் ஒரு பாட்டுப் பாடாப் பறவை கிடையாது” என்று கூறப்படுவதுண்டு, தமிழரிடை அன்று புலமை பெற்றவரெல்லாம் நக்கீரர் கபிலர் பரணருடனொப்ப ஒரு பாட்டுப் பாடினர் போலும்!

சங்கமும் சங்க வாழ்வும்

சங்க இலக்கியம் என்று கூறும்போது நாம் தனித் தமிழ் இலக்கியத்தின் பெருமையில் இறும்பூதெய்துகிறோம். ஆனால் ‘சங்கம்' என்ற சொல்லே வடசொல் எனச்சிலர் நையாண்டி செய்வதுமுண்டு. அத எம் மொழியாயினும் ஆகுக. இந்தியா என்றபெயர் வெளியாரால் கொடுக்கப்பட்ட காரணத்தினால் இந்தியா வெளியார் நாடாய் விடாது. சங்கம் தமிழ்ச்சொல் அன்று என்பதற்கும் சரியான சான்று எதுவும் இல்லை. வடமொழியில் அச்சொல் உண்டாயினும் வேறு எந்த ஆரியமொழியிலும் அது இல்லை. அகவே அது ஆரியத் தொடர்பற்ற இந்தியச் சொல், அதாவது தமிழ்ச் சொல் என்பதில் ஐயமில்லை. மற்றும் கூடல், மன்றம், பட்டி, கழகம் முதலிய பிறசொற்களும் உள்ளன. வடமொழியாளர் சங்கம் என்ற சொல்லை ஆண்டு கொண்டதுடன் கழகம் என்பதனைப் பிற்காலத்தில் கடிகா என்று வழங்கினர். வை வடவர்