பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

21

சொற்களென மயங்கலாமாயினும் வடமொழி வழக்குகள் பிற்பட்டவை என்பது விளக்கம் தரும். இன்னும் தெளிவு வேண்டுமானால் பட்டி என்ற சொல்லிலிருந்தே தமிழில் பட்டோலை, பட்டாங்கு, பட்டகசாலை என்ற சொற்கள் மட்டமன்றி இன்று வடமொழியிலும் பிறமொழியிலும் படித்த புலவர் என்ற பொருளில் வழங்கும் பட்டர் என்ற சொல்லும் தோன்றியுள்ளமை காணலாம்.

சிக்குச்

சொல்லாராய்ச்சியை விடுத்துச் சொற் பொருளாராய்ச் ச் சென்றால் சங்கமும் சங்கவாழ்வும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை என்பதை இன்றும் காணத்தக்க வகைகள் மிகப்பல திட்டமிட்ட வாழ்க்கையையும் நகர் நாடுகளையும் அமைப்பது மொகஞ்சதரோ கால முதல் இன்று வரை இந்தியாவின் பொதுப் பண்பாடும் தமிழர் சிறப்புப் பண்பாடும் ஆகும். கப்பலுக்கும் படகுக்கும் மட்டு மன்றி ஆறுகளிலும் குளங்களிலும் குளிப்பதற்குத் துறை களும் நடுவே கோவில் (கோவின் இல்லம் அதாவது அரண் மனை) சுற்றிலும் மாடத் தெருக்கள் என்ற முறையில் நகர் அமைப்பது ஆகியபண்புகளை மதுரை போன்ற பழந்தமிழர் நகர்களில் காணலாம். இதுபோலவே மொழியையும் கலையையும் திட்டமிட்டு வளர்க்கத் தமிழர்கண்ட சாதனமே சங்கம். மொழியின் சொல் தொகுதியில் அவர்கள் ஏற்படுத்திய சீர்திருத்தமே பிற்கால உரையாசிரியர்களால் ‘கடிசொற்கள்' என வரையறையிடப்பட்டன. இலக்கியத்தில் அவர்கள் ஏற்கத்தக்க உயர் இலக்கியங்களுக்குத் தம் பொறிப்பிட்டனர். அங்ஙனம் பொறிப்பிட்ட நூல் அல்லது நூற்பகுதித் தொகுதியே சங்கத் தொகை நூல்கள் ஆகும்.

தமிழர் சங்க வாழ்வு பற்றிச் சிலர் ஐயுறுகின்றனர். சங்கத் தொகை நூல்கள் அதற்குப் போதிய சான்றாயினும் சங்கத்தைப் பற்றிய குறிப்புப் பிற்கால நூல்களில் மட்டுமே வருகின்ற தென்று குறைகாண்கின்றனர். புதிதாக வரும புதுமையையும் பழங்கதையாகப் போன செய்தியையுமே மக்கள் குறிப்பது இயல்பு. வாழ்க்கையின் இன்றியமையாச் செய்திகளை, குறிப்பிடவேண்டிய தேவையிருந்தாலன்றி யாரும் குறிப்பிடார். ஆனால் சங்க நூல்களிலும் சங்கமரபு பொதுவாழ்வில் கூட