பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 15

இருந்திருப்பது குறிப்பிடப்படாமலில்லை. ‘தந்தை மகற் காற்று நன்றி அவையத்து முந்தியிருப்பச்செயல்' என்ற குறலில் கூறிய அவை கல்வியுடையார் மதிப்பை அளந்து ஏற்கும் அவை. பொதுவாக அவையினையுடைய வாழ்வில் தலையான அவை பின்னும் சிறப்புற்றிருத்தல் வேண்டும். மேலும் இன்று காறும் சங்க மரபின் பின்னெச்சமாக நூல் அரங்கேற்றும் பண்பு தமிழரிடையே மட்டும் சிறப்புறுகிறது.நூல் மட்டுமன்றி, சையும் நடனமும் அறிமகப்படுத்தி விளம்பரப்படுத்தப் படும் போதும் அரங்கேற்றம் என்றே கூறுகிறோம். சங்கமும் அரங்கமும் அருகியபின் சாத்துக் கவிகள் வழங்கலாயின.

செந்தமிழ் மரபு

சங்கத் தமிழ் மரபின் இன்னொரு பயன் ‘செந்தமிழ்’ தோற்றுவிக்கப்பட்டதாகும். சங்க காலத்தில் செந்தமிழே சிறப்பாகத்தமிழ் என்றும் பிற தமிழ் திசைசெம்மொழி(Regional Languages) என்றும் வழங்கப்பட்டன. செந்தமிழல்லாத மொழி பிற்காலத்தில் கொடுந்தமிழ் என்று என்று வழங்கப்பட்டது. சங்க வாழ்வால் திருத்தம் பெற்ற செந்தமிழைப் பின்பற்றியே வடநாட்டார் சம்ஸ்க்ருதம் (திருத்தப்பட்ட மொழி) அமைத்தனர். செந்தமிழின் சொற்களே கடிசொற்கள் என ஏற்கப்பட்டன. தால்காப்பியர் நீக்கிய 'கடிசொற்களல்லாத வற்றை' சங்க

லக்கியமும் வழங்கவில்லை. செந்தமிழ் தமிழ்த் தலைநகரான மதுரையில் மதிக்கப்படும் மதுரைத் தமிழ், அதன் மதிப்பு மூலம் தமிழ் நாடெங்கும் அதுவே இலக்கிய வழக்கு மொழியாயிற்று. சங்கப் புலவரிடை தமிழ் நாடெங்கணுமிருந்து புலவர் வந்து பாடினராயினும் பாடிய வழக்குமொழி இதே செந்தமிழ் தான். இச்செந்தமிழிலேயே திசைமொழியும் திசை வழங்கும் சிறிது கலந்த காரணத்தால் தான் சிலப்பதிகாரம், மணிமேகலை சங்க இலக்கியத்தில் சேர்க்கப்படாதிருக்க வேண்டும் என்னலாம். ஏனெனில் சிலப்பதிகாரம் வழங்கிய மலையாள நாட்டிலேயே எழுந்த பதிற்றுப் பத்து ஏற்கப்பட்டுள்ளது. சங்க இலக்கித்தின் தூய தமிழ் நடை இன்றைய தமிழ் வளக்குறைவால் கடமையாய் விட்டிருத்தல் இயல் பாயினும். சிலப்பதிகாரம், மணிமேகலை பிற சங்ககால நூல்கள் அவற்றினும் எளிமையுடையவையா யிருப்பதும்; தொல்காப்பியம் இலக்கண நூலேயாயினும்,