பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

23

சங்கநூல்களினும் பழமையுடைய தாயினும், அவற்றினும் எளிய நடையுடையதாயிருப்பதும் அவை செந்தமிழ் நடைமுழுவதும் கட்டுப்படுத்தப்படாத நிலையைக் குறிப்பதாகும் என்னலாம்.

தமிழ்ப் புலவர் தமிழ் நாடெங்கணும் எல்லா வகுப் பிலும் இருந்தாலும் பாண்டியரன்றிச் சேரரும் சோழரும் வேளிரும் செந்தமிழ்ப் புலவரை ஆதரித்தாலும் சங்கம் அமைத்துத் தமிழராட்சி புரிந்தது மதுரையில் மட்டும் தான். க்காரணத்தாலேயே பாண்டியநாடு தமிழ்நாடு என்றும் செந்தமிழ் நாடு என்றும் தனிப்படச் சிறப்பிக்கப்பட்டது. சேர நாட்டவரும் சோழநாட்டவரும் தம் நாட்டினும் பாண்டிய நாட்டைச் சிறப்பித்துக் கூறியது சங்க வாழ்வின் பெருமையையும் செந்தமிழ்த் தலைமை நிலையையும் எண்ணியே யாகும்.

சங்க காலத் தமிழகப் பரப்பு

சங்க காலத்தில் செந்தமிழ் இலக்கிய வழக்குள்ள தமிழகம் இன்றைய தமிழகத்தைவிட நாகரிகத்தில் மட்டுமின்றி எல்லை யிலும் விரிவுடையது. இன்று வடக்கே தமிழக எல்லையாயுள்ள வேங்கடம் அன்று செந்தமிழ் எல்லையாகவே இருந்தது. அதற்கு வடக்கிலுள்ள மன்னர் சிலரும் தமிழகப் புலவரால் பாடப் பட்டனர். மேற்கே சேரநாடு சிறப்பாகச் செந்தமிழ் நூல்கள் தோற்றுவித்துப் புலவர்களைப் பாராட்டிய நாடாயிருந்தது. மலையாள நாட்டில் சேரநாட்டின தென் எல்லையாகிய கொல்லத்திலிருந்து வடக்கே இன்றைய மலையாள எல்லையைத் தாண்டித் தென்கன்னடக் கோட்டத்திலும் செந்தமிழ் வழக்கு நிலவியிருந்தது. தமிழ் வேளிருள் ஒருவனான நன்னன் ஆண்ட பகுதி இதுவே.

தொல்காப்பிய காலத்தமிழக எல்லை இன்னும் விரிந் திருந்த தென்பதில் ஐயமில்லை. இன்று கடலிருக்கும் பகுதி களிலிருந்த தமிழகம் பற்றிச் சங்க நூற்பாடல்களிலேயே செய்திகள் காணப்படுகின்றன. அம்மறைந்த தமிழகத்திலுள்ள குமரியாறு தொல்காப்பியத் தென் எல்லையாகக் குறிக்கப்படுகிறது. தொல்காப்பியர் காலத்திலே குமரியாற்றிற்குத் தெற்கிலுள்ள பகுதிகள் செந்தமிழ் நிலமல்ல எனக் கடியப்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில் அதற்கும் தெற்கிலுள்ள பஃறுளியாற்றைப்