பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் - 15

பாண்டியன் ஆண்டிருந்ததையும் அதன் கரையிலேயே பாண்டியன் தலைநகர் அமைந்திருந்ததையும் புறநானூற்றுக் குறிப்புகளும் உரைக் குறிப்புகளும் காட்டும். தெற்கில் எல்லை தமிழக எல்லையாகக் கூறப்படாமல் செந்தமிழக எல்லையாகக் கூறப்பட்டதை நோக்க. வடக்கே திருப்பதி எல்லையும் தமிழக எல்லையன்று. செந்தமிழக எல்லையென்றே கூறல் தகும். சங்ககாலத்துக்கு முன்னிருந்த தமிழர் முத்தமிழ் நானிலத்தைச் செந்தமிழ் நிலமாகக் குறுக்கிக் கொண்டே வந்தனரென்றும், சங்ககாலச் செந்தமிழ் நிலமாகிய பகுதியும் பிற்படக் குறைந்து, தென் கன்னடக்கோட்டம் கன்னட நாட்டிற்கும், மலையாளக் கரையின் நடுப்பகுதியும் வட பகுதியும் மலையாள நாட்டிற்கும் உரிமையாயின என்றும் காணலாம். நன்னூலார் தமிழகத்தின் மேற்கெல்லை கடலெல்லை என்னாது குடகுமலை என்றது இதனாலேயே.

இடைக்கால பிற்காலங்களில் செந்தமிழ் எல்லை பின்னும் குறுக்கப்பட்டுச் செந்தமிழ்ப் பாண்டியின் தென் பகுதியும் சோழவள நாட்டின் பெரும் பகுதியும் கொடுந்தமிழ் நாடுகள் எனக்கருதப்படத் தொடங்கின. பிற்காலப் பாண்டியர், திருவாங்கூர் அரசர் தமிழ வெற்றிகளே தமிழகத்தை ஒன்று படுத்தித் தமிழக எல்லையைத் திருவேங்கடத் துடனாவது நிறுத்தி வைத்தன.

முடிவுரை

இங்ஙனம் உலகநாடக இலக்கியத்தின் வேர் முதலைக் காட்டத் தக்கவையாயும், இன்றும் உலக இலக்கியத்துக்கு வழிகாட்டும் உயர்தனிப் பண்பாட்டையுடையவையாயும் இந்திய மாநிலத்தின் முதற் பேரிலக்கியமாகவும், தனித்தியங்கவல்ல தனித் தமிழ்ச் சோலையாகவும், அளவில் பலமொழிகளின் முழு லக்கியத்துடனும் ஒப்பிடக்கூடியவையாகவும் தன்மையில் பிந்திய தமிழிலக்கியத்தையும் பிறமொழி இலக்கியங்கள் யாவற்றையும் விஞ்சியவையாகவும் உள்ளசங்க நூல்கள் தமிழகத்தின் அறியாமை என்னும் மண்ணுட் கிடக்கும் ஒரு புதையலே என்பதில் ஐயமில்லை. அதன் மாண்பைத் தமிழரே அறியாது விட்டுவைத்துள்ளனர். அவர்கள் புறக்கணிப்பின்