பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்க இலக்கிய மாண்பு

25

பயனாக உலகினர்கண்களுக்கும் அது இன்னும் எட்டாமலே இருந்து வருகிறது. ஏழை வீட்டு வைரம் எங்ஙனம் மதிப்பிடப்பட முடியும்?

சங்க இலக்கியமும் அதன் தாய் மொழியாகிய தமிழும் உண்மையில் உலகின் உயர் தனிச்செம்மொழிகளிலும் அவற்றின் இலக்கியங்களுள்ளும் இடம் பெறத் தக்கவை. இடம்பெற வேண்டும். இந்திய நாகரிகம் சமயச் சார்பற்றது. வகுப்புச் சார்பற்றது. அறிவை அடிப்படையாகக் கொண்டது. தொழில் வளமும் வாணிக வளமும் நிரம்பிய நகர வாழ்க்கை யடிப்படையாகக் கொண்டது. கடல் கடந்த பேரரசும் குடியேற்றமும் வாணிகமும் உடையது. இக்கருத்துக்கள் இன்று உணரப்படாமல் இந்தியா கிராம வாழ்வுக்கும் எளிய வாழ்க்கைக்கும் பேர் போனது; ஆன்மிகப் பெருமையே யுடையது; பழமை பேணி வருவது என்ற தவறான கருத்துக்கள் பரவியுள்ளதற்கு இருண்ட இடைக்கால இலக்கியமாகிய வடமொழி இலக்கியமே இந்தியாவின் உயர் தனி இலக்கிய மென்று கொண்டதே காரணமாகும்.

தமிழர் வாழ, இந்தியா பயன் பெற, உலகம் புது ஒளி பெறச் சங்க இலக்கிய அறிவு ஓங்குமாக.