பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

-

அப்பாத்துரையம் 15

புதுமலர்ச்சி முளைத்தெழுந்தோறும் - இம் மூன்று ஏடுகளும், என்றும் உலகின் புதுச்செல்வங்களாய் நின்று வளரும் தன்மையவை.தொல்காப்பியர் குறித்த 'வடு நீங்கு சிறப்பு உடைய 'கொடி நிலை, கந்தழி, வள்ளி' என்ற முப்பொருள்கள் போல, ஞாயிறு, திங்கள், அனல் ஆகிய மூன்று ஒளி விளக்கங்கள் போல, அவை புத்துலகில் ஒளி வீசத்தக்கவை.

தமிழ நாகரிகத்தின் ஆழ, அகல, உயரங்களை நமக்குக் காட்டவல்ல ஏடு தொல்காப்பியம். அவர்கள் பண்பின் நுட்ப திட்பங்களையும், அதன் அடிப்படை உயிர்த்துடிப்பையும் காட்டவல்லது திருக்குறள். இவற்றுடன் ஒப்பாக, தமிழனின் மாண்ட மாபெரும் பண்புடைய இலக்கிய வளத்தையும் கலைப் பொலிவையும் சுட்டிக் காட்டவல்ல அருங்கலை விளக்கம் சிலப்பதிகாரம். இச் சிலப்பதிகாரம் நமக்குக் கிட்டாது போயிருந்தால், மற்றத் தமிழ் இலக்கியப் பரப்பின் உதவியாலோ, தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய நூல்களாலேகூட, நாம் பண்டைத் தமிழர் இலக்கியத்தின் அரும்பெரு மாண்பையும் அகல்விரிவையும் அவ்வளவாக மதிப்பிட்டு அறிய முடியாதவர்களாவோம்.

ச்

உரைகள் அல்ல உறைகள்

சங்க காலத்துக்குப் பிற்பட்டு, தமிழர் அடிமை நாள்களிலே, இந்த மூன்று தமிழ்க் கருவூலங்களையும் தமிழர் எவ்வாறு பேணினர் என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். அவ் வொப்பீடு சிலப்பதிகாரத்தின் அருமையை ஓரளவு எடுத்துக்காட்டுவதாக அமையும்.

தால்காப்பியத்தைத் தமிழர் முற்றிலும் மறந்த நாள் கிடையாது எனலாம். ஆனால், அது மிகத் தொல்பழங்காலத் திலேயே புலவர்களின் உள்ளத்தில் சிறைப்பட்டுவிட்டது. தேவாரக் காலத்திலேயே (கி.பி.7ஆம் நூற்றாண்டில்) அது புது எழுத்தாளர்களைப் பயமுறுத்துவதற்குரிய ஒரு பூச்சாண்டியாகி விட்டது. அதன் பின்னர்ப் புலவர் படிப்பதற்குரிய புதிய வழி நூல்கள் ஏற்பட்டன. தொல்காப்பியம் புலவர்களால்கூட மிகுதி தீண்டப்படாத பூசைப் பெட்டகம் ஆயிற்று.