பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

31

அதற்கு உரைகள் எழுந்தன. பூசைப் பெட்டகத்துக்கு அவை பூமாலைகள் இட்டன. புரிந்த அளவில் அவை புகழ் பாடின. புரியாத இடத்தில் பூசை செய்தன.

திருக்குறளின் டைக்காலப் புகழ் வாழ்வு, தொல்காப்பியத்தைவிடச் சிறிது ‘தேவலை' எனலாம். ஏனென்றால், அஃது இலக்கியத்தின் உயிர்நாடியாய்ப் 'பாடும் புலவர்' நாவிலெல்லாம் ஊடாடிற்று. ஆனால், பொது மக்கள் வாழ்விலிருந்து அது தொலைவிலேயே நின்றது. அத்துடன் காலத்துக்கேற்ற புதுப் புது உரைகள், அதற்குப் புதுப் புது 'உறைகளாகவே' பயன்பட்டன. அவை, அதன் ஒளி உருவை மறைத்தது மட்டுமல்ல; காலத்துக்கேற்றபடி உருவும் பண்பும் திரித்து, அதற்கு வேறு ஒரு ‘புகை உரு'வையே உண்டு பண்ணின. இவ்வகையில் தொல்காப்பியத்தைக் காட்டிலும் திருக்குறள் நூலும் புகழும் நன்னிலையில் நம்மை வந்து அடைந்தாலும், அதன் பண்பு அவ்வாறு நம்மை வந்து அடையவில்லை. உரைகளால் முழுதும் விளக்கப்படாத தொல்காப்பியத்தைவிட, ‘உறை’களாகிய ‘உரை' பெரிதும் மறைக்கப்பட்ட திருக்குறளின் இடைக்காலப் புகழ் வாழ்வு அவலமுடையதே ஆகும். மறைவுற்ற முழுமதி.

சிலப்பதிகாரத்தின் இடைக்கால வாழ்வு மற்ற ஈர் ஏடுகளின் வாழ்வையும் போன்றதல்ல. அந்த ஏடு எங்கேயோ கிடந்தது- டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்களின் திருக்கரங்களுக்காக அது ஏங்கித் தவம் கிடந்தது.

அங்ஙனம் கிடக்கும் நாளிலும், பொது மக்கள், அதன் கதையை நாடக மாடியதுண்டு. தமிழ் நாட்டாரும் வெளிநாட்டாரும்கூட ஆங்காங்கே கண்ணகி கோவிலைச் சுற்றி வந்து அதன் விவரம் அறியாமலே வணங்கியதுண்டு. ஆயினும், சிலப்பதிகாரம் பொதுமக்களுக்குத் தெரியாத புதை பொருளாகவே டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் வெளிப்படுத்தும் வரை இருந்து வந்தது! அது மட்டுமோ? தொல்காப்பியத்தைப் போற்றிய புலவர் இருந்தனர். திருக்குறளைத் தம் கவிதைக்கு ஊற்றாக்கிப் புதுப் பாடல் பாடிய, 'பாடும் புலவ'ரும் இருந்தனர். ஆனால், சிலப்பதிகாரம் ஒன்றுதான் இரண்டாயிரம்