பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

33

சிலப்பதிகாரத்தின் உரைகளாகிய அரும் பதவுரையும். அதனை அடுத்து வந்த அடியார்க்கு நல்லார் உரையும், முதனூலை விளக்கிற்று முதலுரை - இரண்டுக்கும் விளக்கம் தந்து புத்தொளி பரப்பிற்று பிந்திய உரை. தமிழ் இலக்கிய வரலாற்றிலே கீழ்நாட்டு இலக்கிய வரலாற்றிலே எளிதில் காணப்படாத உயிர்த்துடிப்புடைய உண்மை நிகழ்ச்சி இது! இலக்கியத்திலே ஷேக்ஸ்பியருக்குக்கூடக் கிடைக்காத நற்பேறு, இங்கே இளங்கோவுக்குக் கிடைத்துள்ளது!

ஆரிய மாயைக்கு அப்பாற்பட்ட மாயை

உலக

தொல்காப்பியத்தை மறைத்தது யார் அல்லது எது? காலன் அல்லது காலம்! திருக்குறளை மறைத்தது யார் அல்லது எது? காலத்தின் கோலம், ஆரிய மாயை! சிலப்பதிகாரத்தை மறைத்தது யார், அல்லது எது? அவ்விரண்டினும் வலிமை வாய்ந்த ஒரு மாயமான, மாயை அது! தொல்காப்பியத்தை யாரும் வேண்டு மென்று மறைக்கவில்லை. அது மறைந்து வந்தது. திருக்குறளை மறைக்க முயன்றவர் உண்டு. ஆனால், மறைக்க முடியவில்லை. உறைபோட, திரையிடத் தான் முடிந்தது.ஆனால்,சிலப்பதிகாரம் மறைக்கப்பட்டது திரையிட்டல்ல-முழு இருட்டடிப்பு, மறக்கடிப்பு மாயையிலேயே அது புதையுண்டது. அஃது இன்று வெளிப்பட்டுள்ளதாயினும் இருட்டடிப்பில் உள்ள ஒரு புழை வழியாகவே, அத்துடன் வெளிப்பட்டு, நூற்புகழுடன் உரைப்புகழும் சேர்ந்து ஒளி வீசத் தொடங்கிய இந்தக் காலத்திலும், அதற்கு மீண்டும் திரையிடப் புதிய மாய ஆற்றல்கள் எழுகின்றன, எழுந்து வருகின்றன.

ஓர் ஆரியப் பெரியாரே வெளியிட்ட இந்த அரிய நூலினை ஆரியர் பாசறையின் அருகில் இருந்து குளிர்காயும் ஒரு தமிழ்ப் பெரியாரும், திராவிடர் பாசறைக்கு அருகிலேயே துணிந்து வந்து குளிர்காய முயன்று வரும் மற்றொரு தமிழ்ப் பெரியாரும் இரு வேறு திசையிலிருந்து இரு வேறு பாணம் தொடுக்க

முனைந்துள்ளனர்.

பகைவன் எதிர்ப்பைவிட வலிமையானது 'நண்பன்' எதிர்ப்பு. ஏனென்றால், நண்பன் உருவில் பகைமை அருஞ்செயல் செய்யமுடியும். ஆரிய மாயை அடிக்கடி இந்த உருவெடுத்து