பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 15

வேலை செய்ததுண்டு. அஃது ஆரிய எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கூட வேலை செய்யவல்லது-வேலை செய்ததுண்டு! திராவிட இயக்கத்தின் காதில் அண்மைக் காலத்திலே கேட்ட-கேட்கும் இரு குரல்களை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

இனத்தை எதிர்க்கும் இனக் குரல்கள்

ஒன்று, திராவிடம் தனித்தமிழ்ச் சொல்லா? சங்க நூல்கள் அதை யறியுமா? திருக்குறள், தொல்காப்பியம் அதை வழங்கியதுண்டா? இவ்வாறு தனித்தமிழ்க்குப் பரிந்து பேசுவதுபோல, சங்க இலக்கியப் பண்புக்கு இரங்குவது போலக் கேள்வி கேட்கும் கம்பரடியார், வால்மீகி அடியார் உண்டு. இந்தக் கேள்வியைக் கேட்பவர் தனித் தமிழ்த் தலைவர், தனித்தமிழின் முடிசூடா மன்னர் மறைமலையடிகள் அல்லர், அல்லது அவர் அடியார், அவர் அன்பர்கள் அல்லர். இக்கேள்வியை அத்தகையவர்கள் எழுப்பியிருந்தால் கேள்வி தவறு என்று நாம் கருதினாலும், கேட்பவர் உளப்பண்பை, உண்மைப் பற்றை மதித்திருப்போம். ஏனென்றால், அவர்கள் தனித் தமிழ்க்குப் பரிந்தே, ஆரியத் தமிழை வெறுத்தே இக் கேள்வியைக் கேட்டிருப்பர். ஆனால், இங்கே கேட்பவர் ஆரியத் தமிழ், கலப்புத் தமிழ்க் கூட்டத்தினர் என்பதே கேள்வியின் குறும்புத் தன்மையை நன்கு குறித்துக் காட்டுகிறது.

து

ரு

இது போன்ற மற்றொரு கேள்வி, இராவணன் திராவிடனா, தமிழனா? அவன் முதல்தர ஆரியனாயிற்றே! காசிபர் குலத் தோன்றலாயிற்றே! என்பது. இது கேள்வியல்ல, கேள்வி உருவில் வந்த ஒரு புதுப்பிரச்சாரம். இங்கும் கேட்பவர் ஆரியரானால், அல்லது ஆரிய திராவிட வேற்றுமை பாராட்டாத உலகப் பற்றாளர், மனித இனப் பற்றாளரானால், கேள்வியில் பொருளுண்டு, பயனுண்டு. ஏனென்றால், அத்தகையவரின் கேள்வி அவர் மனமார்ந்த எண்ணத்தையே குறிக்க இடமுண்டு. ஆனால், ஆரியர்க்கு ஒரு நீதி, அல்லாத நாட்டு மக்களுக்கு மற்றொரு நீதி என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த சுமிருதிகள், புராண இதிகாசங்களை ஏற்றுக்கொண்ட இந்துமத ஆதரவாளர்-இந்தியாவின் சட்டத்தை ஆதரிப்பவர் - சமுதாய, சாதி அநீதிகளை எதிர்க்க விரும்பாது நேரடியாகவோ