பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

35

மறைமுகமாகவோ ஆதரிப்பவர்களிடமிருந்து இந்தக் கேள்வி வரும் போது, அது வழக்கறிஞரின் மாட்டி வைக்கும் பொறிக்கேள்வி ஆகிறது. எதிரிகளிடையே பிளவு உண்டுபண்ண எண்ணும் சூழ்ச்சிக் கேள்வி இஃது என்பது தெளிவு. ஏனென்றால், கேள்வியின் நோக்கம் விடையையோ விளக்கத்தையோ எதிர்பார்த்ததன்று. கேள்வி கேட்பதன் மூலமே ஒரு பிரச்சாரம் செய்து, தன் அறிவில் உள்ள குழப்பத்தை எதிர்த்தரப்பாரின் உள்ளத்திலும் மெள்ள உணர்ச்சி வழியாகப் புகுத்துவதே இத்தகைய கேள்விகளின் நோக்கமாக அமைகிறது.

குட்டையைக் குழப்பும் முறை

குட்டையைக் குழப்பும் இதே முறையை இருவேறு அறிஞர்- இருவேறு கூடாரத்திலிருந்துகொண்டு-இருவேறு கொள்கை களுடன் சிலப்பதிகாரத்தின் மீது செலுத்தி இருமுகப்பட்ட தாக்குதல்களால் - சிலப்பதிகாரத்துக்கன்று - தமிழ்க்கே ஊறு விளைவிக்க முனைகின்றனர்.

ரண்டு பாணங்களும் அறிஞர் உலகை அசைக்க வில்லை- தை அவர்கள் அறிவர். புலவர் உலகம் அவற்றைப் புறக்கணிக்கிறது - இது கண்டு அவர்கள் ஒரு சிறிதே புழுங்கு கின்றனர். ஏனென்றால், எதிர்ப்பு அவர்களுக்கு ஓர்அளவு விளம்பரம் கொடுத்திருக்கும். ஆயினும், அவர்களது தலையான நோக்கம் அறிஞர்களையோ புலவர்களையோ எதிர்ப்பதன்று. அவர்கள் ஆராய்ச்சி விளக்கத்தை எதிர்பார்ப்பதுமன்று. அவர்கள் குறிக்கோள் பொதுமக்கள் உள்ளத்தில் சிலப்பதி காரத்துக்கு ஏற்பட்டுவரும் சிறப்பை ஒரு சிறிதேனும் குறைப்பதே! இதற்கு என்ன காரணம் என்பதைப் பொதுமக்கள் இன்று அறியமாட்டார்கள் - அறிஞர்கள், புலவர்கள்கூட முழுவதும் கண்டுகொள்ள முடியாது.சிலப்பதிகாரம் மூலம் அனைத்திந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் தமிழ்க்கு ஓரளவு ஏற்பட்டுள்ள - அல்லது விரைவில் ஏற்பட இருக்கின்ற பெருமையைக் குறைப்பதே அவர்களது நோக்கமாகும்.

இதனினும் ஆழ்ந்த ஒரு நோக்கம் இந்த மாய எதிர்ப்புக்கு உண்டு. தமிழ்மொழி ஆரியத்தால் அமிழ்த்தப்பட்டு, உலக அரங்கில் இடம் பெறாமல், அனைத்திந்திய அரங்கில்