பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

புறக்கணிக்கப்பட்டு,

அப்பாத்துரையம் - 15

இருட்டடிக்கப்பட்டு வருகிறது. தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றோடு சிலப்பதிகாரமும் சேர்ந்து இந்நிலையை மாற்றிவருகிறது. இதை வெளிநாட்டுத் தொடர்புடைய அறிஞரே உணர்வர். அத்துடன் சிலப்பதிகாரம் தமிழின் பழைமையையும் வடமொழி தாண்டி உலக அரங்குக்குக் கொண்டு செல்லத் தக்கதாய் இருக்கிறது. தமிழ்க்கு அந்நிலை ஏற்பட்டுவிட்டால் என்ன நேரும்? தமிழை மட்டுமன்றி, மற்றக் கீழ்நாட்டுத் தாய்மொழிகளையும் வளரவிடாமல் அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்யும் ஆரிய மொழியின் ஆதிக்கம் இதனால் தளர்ந்துவிட வழியுண்டு. இதைத் தடுக்கவே மாய எதிர்ப்புகள் முனைந்துள்ளன.

எதிர்ப்பு மூலம் தமிழ் எதிர்ப்பாளருக்கு நாம் விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை. ஆனாலும் அவர்களுக்குத் தரும் விளக்கமே பொது மக்களுக்குச் சிலப்பதிகாரத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் காட்ட ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதுகிறோம். சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சிறப்புமட்டுமன்று, தமிழ்ப்பண்பாடு-கலைப்பண்பு ஆகியவற்றின் வரலாற்றுக்கு அது தரும் சிறப்பையும் அனைத்திந்திய, உலக அரங்குகளில் தமிழ்க்கு அஃது அளிக்க இருக்கும் சிறப்பையும் விளக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

தமிழில் அழிந்துபட்ட நூல்கள் பல. அவை இத்தனை என்றோ, இன்னின்னவை என்றோ, இத்தகையவை என்றோ எவராலும் மதிப்பிட்டுக் கூற இயலாது. பிறநூல் குறிப்புகளால் அழிந்துபட்டவை என்று திட்டமாக அறியப்படும் நூல்கள் ட்டுமே ஆயிரத்துக்குமேல் உள்ளன என்று ஆசிரியர் மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் கணித்துள்ளார்கள்.

மட்

அழிந்துபட்ட நூல்களில் பெரும்பாலானவை கடல் கோளினாலோ, வேறு இயற்கை மாறுதல்களாலோ அழிந்தவை அல்ல. ஏனெனில், அவை படிப்படி யாகவே அழிந்துவந்தன. 14ஆம் நூற்றாண்டுவரையும் அதற்கு இப்பாலும் இருந்து அதன் பின்னரே பல அழிவுற்றன என்று அறிகிறோம். பல, தொல் காப்பியர் காலத்துக்கு முன்னிருந்து அந்நாள்வரை தொகுதி தொகுதியாக அழிந்துகொண்டே வந்தன. பல இப்போதும் அழிந்துசெ காண்டே இருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை.