பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

37

இவ்வழிவுக்குக்

காரணம்

தமிழ்நாட்டின் அரசியல்

மாறுபாடுகளும் பண்பாட்டு மாறுபாடுகளும், இவற்றுக்குக் காரணமான ஆரியரின் சமய சமுதாய அரசியல், பத்திரிகை ஆதிக்கமுமேயாகும் என்பது கூறாமலே அமையும். தமிழ்க்குரிய தகுதியும் உரிமையும் மேம்பாடும் இன்னும் இந்நிலைகளால் மிகுதியும் பாதிக்கப்பட்டே வருகின்றன. கிளர்ந்து எழுந்து வரும் மக்கள் சத்தியும் மறுமலர்ச்சி ஆற்றலுமே இச்சூழலைத் திருத்தியமைக்க வேண்டும்.

இழந்த செல்வங்கள்

நாம் இழந்த இலக்கியச் செல்வங்களின் பட்டியலில் எத்தனை சீரிய பண்பாட்டுக் கருவூலங்கள் இருக்கக்கூடு மென்பதையும்; தமிழ், தமிழர். தமிழின நாகரிக, வரலாற்றுப் புதையல்கள் எத்தனை இருந்திருக்கக் கூடுமென்பதையும் சிலப்பதிகாரம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில், அஃது அந்தப் பட்டியலிலிருந்து மயிரிழை அளவில் தப்பிப் பிழைத்த ஒரு கலைக் களஞ்சியமே ஆகும். உண்மையில் சங்க காலத்திலும் அதற்கு முற்பட்டும், பிற்பட்டும் பெயர் அறியப்பட்ட எத்தனையோ நூல்கள் அப்பட்டியலில் இடம் பெற்றுவிட்டன. பெயர் அறியப்படாதன இன்னும் எத்தனையோ? சங்க இலக்கியத்தில் முழு நூல்கள் மட்டுமன்றி, கிடைத்த நூல்களில் பல பகுதிகள் கூட அப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவை ஆகிவிட்டன.

சிலப்பதிகார வகையில்கூட அரும்பதவுரை ஆசிரியர்க்கு முன் இருந்ததாக அவ்வுரையால் அறியப்படும் முதல் உரை நமக்குக் கிட்டவில்லை. தவிர அடியார்க்கு நல்லார் உரையில் 7ஆவது காதை கானல் வரிக்கும் 20ஆவது வழக்குரை காதைமுதல் உள்ள பதினொரு காதைகளுக்கும் உரை அகப்படவில்லை. தமிழ்ப் பண்பாட்டுக்கு உதவும் அரும்பெரு மாண்புடைய ஈடும் எடுப்பு மற்ற பொன்னுரையாகிய அடியார்க்கு நல்லார் உரையில் நமக்குக் கிட்டியுள்ளது சிலப்பதிகாரத்தின் 30 காதைகளில் 18 காதை யொழிய மீந்த 12 காதைகளுக்கு மட்டுமே என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.