பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 15

இழந்த செல்வங்களிலிருந்து சிலப்பதிகாரமும் அதன் உரைப் பகுதிகளும் மீட்கப்பட்டதற்குத் தமிழர் எவ்வளவோ மகிழ்வுறுதல் வேண்டும். ஏனென்றால், அதன் மூலம் நமக்குக் கிடைத்துள்ளது சிலப்பதிகார நூல் மட்டுமன்று. தமிழரின் இழந்த பேரிலக்கியத்தின் பரப்பு, உயர்வு, தகுதி ஆகியவற்றையும் அதன் பண்பையும் ஆராய்ந்தறிய இந்த நூலின் வெளியீடே நமக்கு உறுதுணையாய் உதவியுள்ளது. தமிழில் வேறு எந்தத் தனி நூலைப் பார்க்கிலும் இவ்வகையில் சிலப்பதிகாரமே தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றுக்கு ஒப்புயர்வற்ற மிகப் பெருங்கருவூலமாகும்.

தமிழ் ஆராய்ச்சிப் போக்கு

தமிழ் மொழி ஆராய்ச்சி, தமிழிலக்கிய ஆராய்ச்சி ஆகியவை தொடக்கத்தில் பெரிதும் தமிழ் நூலின் பரப்பையும் மொழிவளத்தையும் மட்டுமே கவனிப்பவையாக இருந்தன. ஏனெனில், அவ்வாராய்ச்சியின் தொடக்கக்காலத்துக்குள் நாகரிக உலக மொழிகளிடையேயும் கீழ்நாட்டு மொழிகளிடையேயும் தமிழ் வகித்து வந்த உயரிடத்தை அம்மொழி முற்றிலும் இழந்து விட்டிருந்தது. இந்தியாவின் நூற்றுக்கணக்கான பண்படா மொழிகளுள் ஒன்று என்ற அடிப்படையிலேயே ஆராய்ச்சி யாளர் அதில் கருத்துச் செலுத்தினர். இந்தியாவின் மொழி களுள் ஆரிய மொழிகள் பண்படாதவை, தென்னாட்டுத் திராவிட மொழிகள் மட்டுமே பண்பட்டவை என்பது அன்று அறியப்படாம லிருந்தது-அறியப்பட்ட பின்பும் ஆரிய அரசியல், சமய, பத்திரிகை, சமுதாய ஆதிக்கங் காரணமாக இன்றும் பொதுமக்களுக்கு இது தெளிவாக உணர்த்தப்படவில்லை அறிஞர் உலகுகூட இதை வாய்விட்டுப் பேசுவதில்லை எழுத்துருவில் குறிக்க எண்ணுவ தில்லை - உயர் குலத்தாராக வாழும் ஆரியர் நலங்களை அது பாதிக்கும் என்ற காரணத்தினால்! இவ்வுண்மை அறிஞர் உள்ளத்துக்குள்ளேயே திரையிடப்பட்டது - திரையிடப்பட்டுவருகின்றது.

இந்தியாவில் திராவிட மொழிகளுக்குரிய தகுதி அடிப்படையான உயர்வு அவற்றுக்குத் தரப்படாதது போலவே, திராவிட மொழிகளிடையே தமிழுக்குரிய தனிப்பெருந் தகுதியும் சிறப்பும் பொதுமக்களிடையே

-