பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 15

இந்நிலையைத் தமிழ் பெறுதல் வேண்டும் என்ற ஆர்வத்துடனே துடித்தது - மக்கள் மறவாத, ஆனால், அரசியலார் கண்களிலும் ஆட்சி ஆதிக்கவாதிகள் கண்களிலும் படாத - மறைமலையடிகளார் உள்ளம்! அதே ஆர்வத்துடன் வான ளாவிய புனைவாராய்ச்சிகளிலும் கடலடி துழாவிய நுணுக்க ஆராய்ச்சி களிலும் பயின்றது, சேலம் பா.வே.மாணிக்க நாயகரின் மூளை! அந்நாளைய (20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திய) புலவர் உலகைப் பேரளவில் தட்டி எழுப்பிய துடிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட முதல் மறுமலர்ச்சி- இதுவே. ஆனால், அந்நாளைய ஆட்சித் தலைவர்கள், அரசியல் ஆட்சி நிலையங்களில் இழைந்த ஆளும் வகுப்பினர், தமிழ் நாட்டுச் செல்வப் ‘பிரபுக்கள்' ஆகியோரின் பண்பும் உணர்ச்சியுமற்ற மர மண்டைகளையும், இதயங்களையும்

அசைக்கவில்லை.

களிமண்

இருவகைப் பண்பாட்டு எதிர்ப்புகள்: கம்பராமாயணம், பெரிய புராணம்

இஃது

சங்க இலக்கியம் தெரியப்பட்ட பின்பும், அதனால் திருக்குறளின் பெருமை துலங்கத் தொடங்கிய பின்பும், சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்த பின்பும் பழைய சூழ்நிலையே நீடித்து, இருந்து வருவது எதனால்? பல காரணங்களை முன்னிட்டு, அந்தச் சூழ்நிலை மாறக் கூடாது என்பதற்காகப் பலர் திரை மறைவில் இருந்து முயன்று வருவதனாலேயே ஆகும். இன்று கம்பராமாயணத்துக்குப் பெருமை தருவதாகப் பறையடிப்பவர்களின் செயல்கள் உண்மையில் கம்பர்க்குப் பெருமைதரும் நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் அல்ல. கம்பராமாயணத்துக்கு முற்பட்ட தனித் தமிழ் இலக்கியத்தின் பெருமை பொது மக்களின் கவனத்துக்கும், உலக அரங்கின் பார்வைக்கும் பரவி விடாமல் தடுக்கும் உள்ளெண்ணம் உடைய செயல்களே அவை. ஏனெனில், அந்நூல்கள் வெளிவருவதற்கு முன் தமிழின் தலைசிறந்த ஏடாகக் கம்பராமாயணம் புகழ் பெற்றது இயல்பே. இதை அடிப்படையாகக் கொண்டு, அதன் பின்னும் கம்பராமாயணமே தலைசிறந்தது என்று விளம்பரப் படுத்துவதில் அவர்கள் பரபரப்பு உடையவராகின்றனர். “சங்க இலக்கியத்தின் பக்கம்,