பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

41

திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியத்தின் பக்கம் நாடிவிடாதீர்கள்” என்று பொது மக்களிடம் கூறாமல் கூறும் செயலே இது.

கம்பராமாயணப் போலி ஆர்வலரின் இத்தமிழ்ப் பகைமை நோக்கத்தை வலியுறுத்திக் காட்டும் இன்னொரு செய்தி உண்டு. தனித்தமிழ் ஆர்வமும் சங்க இலக்கிய ஆர்வமும் உடைய தமிழ் ஆர்வலர் கம்பராமாயணத்தைப் போலவே பெரிய புராணத்தையும் தமிழ்ப் பண்பாடு குன்றிய இடைக்கால நூலாகக் கருதுகின்றனர். இது தவறன்று. கம்பராமாயணமும் பெரிய புராணமும் இரு வேறு வகையில் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஊறு செய்பவையே ஆகும். ஆயினும், கம்பராமாயணத்தைப் போலப் பெரிய புராணம் சமற்கிருத மொழிக்கும் ஆரிய புராண இதிகாச சுமிருதிகளுக்கும் ஆக்கம் தரவோ தமிழுக்குச் சிறுமை அளிக்கவோ அளிக்கவோ உதவமாட்டாது. கம்பராமாயண ஆர்வலர் இக்காரணத்தினாலேயே கம்பர் கால நூலாகிய பெரிய புராணத்தினையும் உள்ளத்தில் தீண்டாமல் விடுகின்றனர் என்பது குறிக்கத்தக்கது.

இடுக்கித் தாக்குதல்

சங்க நூல்களின் வெளியீடும் அறிவும் தமிழ்க்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் உலக அரங்கில் பெரும் புரட்சி செய்யத்தக்கவை - ஆனால், செய்யவில்லை. இது கம்பராமாயண ஆர்வலர் தமிழ்க்குச் செய்த, செய்கிற கேடு. சிலப்பதிகார வெளியீடும் சங்க நூல்களுக்குக் குறைந்த புரட்சித் தகுதி உடையதன்று. ஆனால், எந்தப் புரட்சியும் இன்னும் நிகழவில்லை. இதற்குக் காரணம் வேறு. சங்க இலக்கியத்துக்காகப் பாடுபட்ட-பாடுபடும் அறிஞர்குழாம் அதிலேயே இன்னும் மிகுதி வெற்றி பெறவில்லை. சிலப்பதிகாரத்துக்கோ, தொல்காப்பியத்துக்கோ ஆர்வம் எழுப்பும் ஆற்றல் அவர்களிடையே ஏற்பட முடியவில்லை - சங்க இலக்கியப் போராட்ட முயற்சியிலேயே அவர்கள் களைப்புற்றுத் தளர்ந்துவிட்டனர். ஆனால், இந்நிலையிலும் சங்க இலக்கியத்தில் காணப்படாத சிலப்பதி காரத்தின் சொல்லழகு, நாடகப் பண்பு, எளிமை நயம், கற்பனைத் திறன் ஆகியவற்றில் ஈடுபட்ட இளைஞர்-மாணவர்-இளம் புலவர் எழுந்துள்ளனர், எழுந்து வளர்ந்து வருகின்றனர். அதன் முழுப் பெருமையும் இன்று

-