பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் – 15

விளங்கா விட்டாலும் விரைவில் விளங்க வழியுண்டு. அதன் மூலமாகத் தளர்ந்துவிட்ட சங்க இலக்கிய இயக்க ஆர்வமும் உரம் பெற வழியுண்டு. இந்த நிலையைக் கூர்ந்து கவனித்து உணர்ந்துகொண்டவர்கள் கம்பராமாயண ஆர்வலர் குழுவில் உள்ள ஒரு சில தமிழ்ப் பகைவர்களே. ஆனால், நாட்டின் செல்வாக்கற்ற அந்தப் பகைவர்களால் சிலப்பதிகார எதிர்ப்பையோ, சங்க இலக்கிய எதிர்ப்பையோ கூட நேரடியாகச் செய்ய முடியவில்லை - தமிழ் மறுமலர்ச்சி அலைபாயும் இந்நாளிலே அவர்கள் தம் எதிர்ப்பைக்கூட நெகிழவிட்டே வருகின்றனர். இந்நிலையில்தான் அவர்களுக்கு ஓர் எதிர்பாரா ஆதரவு கிடைக்குமென்ற நைப்பாசை கிளறப்பட்டு வருகிறது - சிலப்பதிகாரத்தை எதிர்க்கும் கம்பராமாயண ஆர்வலருக்கு உதவியாக, கம்பராமாயண எதிர்ப்பு அணியிலேயே ஒருவர் அல்லது கம்ப ராமாயண எதிர்ப்பாளர் மேலாடையைத் தற்காலிகமாக இரவலாக வாங்கிப் போட்டுக் கொண்ட ஒருவர் முன்வரத் தொடங்கி உள்ளார்!

சிலப்பதிகார எதிர்ப்பை ஊக்கி அதன் மூலம் தளர்ந்து விட்ட முறிந்து வருகிற சங்க இலக்கிய எதிர்ப்பைப் புதுப்பித்து- ஆரியப் பாதுகாப்புக் கோட்டையை உறுதிப்படுத்தி அவ்வழியாக தமிழ்வளர்ச்சியை ஏன், திராவிட மொழிகளின் வளர்ச்சியை- அனைத்திந்தியத் தாய் மொழிகளின் வளர்ச்சியை - நாட்டு மக்கள் முற்போக்கை - நாட்டின் வருங்கால வாழ்வைத் தடைப்படுத்த இந்த இருமுனை இடுக்கித் தாக்குதல் பயன்படும் என்று சில ஆரிய நிழலில் அமர்ந்து ஆராய்ச்சி இழை நூற்கும் ஒரு சிலர் சரியாகவோ, தப்பாகவோ கணக்குப் போடுகின்றனர்! இதைத் தெரிந்தோ, தெரியாமலோ - தங்கள் தனி நலம் கருதியோ, தனி ஆதிக்கம் கருதியோ ஆரிய எதிர்ப்பு அணியின் நிழலில் ஒதுங்கி, பகுத்தறிவியக்கத்தில் குளிர்காய வந்த ஒருவர் ஆதரிக்க முனைகின்றார்!

சிலப்பதிகாரமும் ஆராய்ச்சியுலகும்

சிலப்பதிகாரத்தின் பெருமைகள், சிறப்புகள் மிகப் பல. அவை பொது மக்கள் உள்ளத்தையும் இளைஞர், அறிஞர் உள்ளங்களையும் ஒருங்கே கவர்ந்து விட்டன. எதிர்ப்பு அணிவகுக்கக் கனவு கண்டு ஆதரவில்லாமல் உளையும் அறிஞர்