பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

43

கூட இவற்றை மனமார ஒப்புக்கொண்டு, புகழ் பாடத் தயங்க வில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தின் எல்லாப் பெருமைகளிலும் எவரும் - எதிர்ப்பாளர் மட்டுமல்லர், ஆதரவாளர்கூட - கவனம் செலுத்தவில்லை. இக்கட்டுரைத் தொகுதியின் நோக்கம் ஆதரவாளர் ஆதரவைப் பெருக்குவதோ, எதிர்ப்பாளரை எதிர்ப்பதோ அன்று. இரு சாராரிடையேயும் புத்துணர்வையும் புத்தார்வத்தையும் எழுப்புவதேயாகும்.

-

-

சிலப்பதிகாரத்தின் முழுச் சிறப்பையும் ஆதரவாளர், எதிர்ப்பாளர் கருத்தைக் கவர்ந்த பகுதிகளையும், அவர்கள் கவனிக்காது விட்ட பகுதிகளையும் - நாம் ஒருங்கே கவனித்தல் வேண்டும்.

சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் - ஆதரவாளர், எதிர்ப் பாளர் உட்பட - கருத்துச் செலுத்திய ஆராய்ச்சிகள் இரண்டுதாம்.

(1)

(2)

சிலப்பதிகாரத்தின் காலம் எது? அது சங்க இலக்கியக் காலத்ததா, அதற்குப் பிற்பட்டதா?

சிலப்பதிகாரம் தமிழ்ப் பண்புடைய நூலா, ஆரியப் பண்புடைய நூலா? இரண்டும் கலந்ததானால், தமிழ்ப்பண்பு மிகுதியா? ஆரியப் பண்பு மிகுதியா?

இந்த இரண்டிலும் தலையிடாமலே சிலப்பதிகாரத்தின் கலைநயத்தில் ஈடுபட்டு நுகர்ந்தவர்கள், அதை எடுத்துக் கலை உலகிலே கையாள்பவர்கள் உண்டு. அவர்கள் சிலப்பதிகாரத்தில் கீழ்வரும் பகுதிகளில் கருத்துச் செலுத்தி ஆராய்ச்சித் துறையில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட தமிழ்ப் பண்புப் பகுதியை விளக்கியுள்ளனர்.

1. கற்புக் கடவுள் வணக்கம், தமிழர் கற்பு நெறி

2.

ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் எவ்வாறு விளக்குகிறது? கண்ணகியின் மறக் கற்புச் சிறந்ததா, பாண்டியன் கோப்பெருந்தேவியின் அறக் கற்புச் சிறந்ததா? சிலப்பதிகாரம் காட்டும் தமிழகத்தின் அந்நாளைய சமயநிலை, திருமணம் முதலிய வாழ்க்கைப் பழக்க வழக்க நிலைகள், வாணிகத் தொழில் நிலைகள் ஆகியவை எந்த அளவில் சங்க இலக்கியங்கள் தரும்