பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் – 15

காட்சியோடு ஒப்புவமை உடையவை? எந்த அளவு வேறுபட்டவை, மிகைப்பட்டவை அல்லது மாறுபட்டவை?

இவையன்றி மூன்றாவதாகப் பெரும்பாலான ஆராய்ச்சியாளர் கவனிக்காத ஒரு துறை உண்டு. அதுவே முன்னைய இரு சாராரையும் தாண்டிய ஆக்கத் துறை. சிலப்பதிகாரத்தின் நாடகப் பண்பு, இசைப் பண்பு ஆகியவையே அது. இத்துறையில் உழைத்தவர் அறிஞருள் அறிஞரும், கலைஞருள் கலைஞருமான ஈழம் தந்த செல்வர் அருள்திரு. விபுலானந்த அடிகளே ஆவார். அவர்தம் ‘மதங்க சூளாமணி' என்ற நூலால் நாடகப் பண்பையும், 'யாழ் நூலால்' இசைப் பண்பையும் தனிப்பட ஆராய முற்பட்டுள்ளார்.

சிலப்பதிகாரத்தின் முழுச் சிறப்பென்று நாம் கூறுவது முன்னைய இரண்டு சார்புகளுடன் மூன்றாவது சார்பான நாடக இசைப் பண்புகளையும் இணைக்கும் முத்தமிழ்ப் பண்பே ஆகும். சிலப்பதிகாரத்தை எல்லாரும் ‘முத்தமிழ்க் காப்பியம்,’ ‘நாடகக் காப்பியம்,’ “உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்' என முன்னாள் மரபின் வழி வந்த தொடர்களால் வழங்குகின்றனர். ஆனால், அவற்றை அழகுத் தொடர்களாகக் கொள்கின்றனரே யன்றி, மறைந்த அறிவுப் பண்பின் சின்னங்கள் என்றோ, நேரிடையான பொருளுடையவை என்றோ அத்தொடர் களைக் கருதி அவற்றில் மிகுதி கவனம் செலுத்தினார்கள் என்று கூற முடியாது. அருள்திரு விபுலானந்த அடிகள் மறைந்த தமிழிசை, தமிழ் நாடகங்களைச் சிலப்பதிகாரத்தின் உதவியாலும், அடியார்க்குநல்லார் உரையின் உரையின் உதவியாலும் உதவியாலும் மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பும் அரும்பெரும் பணியைச் செய்துள்ளார். ஆனால், சிலப்பதிகாரமே உண்மையில் முத்தமிழ்க் காப்பியம், நாடகம் என்னும் உண்மை இன்னும் விளக்கப்படவில்லை. அம்முறையில் சிலப்பதிகாரத்தை ஆராய முற்பட்டால், சிலப்பதிகார ஆராய்ச்சியையும், எதிர்ப்பாராய்ச்சியையும் ஒரே புத்தாராய்ச்சியில் இணைத்துவிட வழி ஏற்படும். அதில் நாம் கருத்துச் செலுத்துதல் வேண்டும்.

தமிழக மறுமலர்ச்சிக்கு உதவிய ஏடுகளுள் தலை சிறந்தது சிலப்பதிகாரமே. மறுமலர்ச்சியைப் புது மலர்ச்சி நோக்கிச்