பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

45

செலுத்தும் ஆற்றல் அதற்கு உண்டு. புது மலர்ச்சிக்கு உரிய பல விதைகள், தூண்டுதல்கள் அதில் உள்ளன.

'நைடதம் புலவர்க்கு ஒளடதம்' என்ற வழக்குச் சொல் உலவிய காலம் ஒன்று இருந்தது. அது மலையேறி விட்டது. நைடதம் கொண்ட இடத்தைக் கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகிய ஏடுகள் கொண்டுள்ளன. அவை அமிழ்தமல்ல, மருந்தல்ல, ஒளடதம்! அதுவும் பொது மக்களுக்கன்று, மாணவ இளைஞர் நங்கையர்க்கன்று, புலவர்களுக்கு! இந்நிலையை மாற்றியமைத்த, இன்னும் மாற்றியமைக்க இருக்கின்ற ஏடு சிலப்பதிகாரமே!

புது வகையான தமிழ்

காண்கிறோம்.

மற்ற ஏடுகளில் நாம் தமிழைக் சிலப்பதிகாரத்தில் முத்தமிழைக் காண்கிறோம். இது புது வகையான தமிழ்-தமிழர் முன் அறியாத தமிழ், வேறு எங்கும் காணாத தமிழ்! அதன் இசை தமிழர் காதில் புதுவகை மாயப் பண்ணுடன் இழைகின்றது.

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே, தேனே! அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

பெருங்குடி வணிகன் பெருமட மகளே!

கோவலன் கண்ணகியை மலரணை அருகே கண்டவுடன் அவ்வணங்கின் பெயர் குறியாது அன்பு குறித்தழைக்கும் சொற்கள் இவை. ஒவ்வோர் அடியும் இங்கே உணர்ச்சியின் வளர்ச்சியை மட்டும் குறிப்பன அல்ல; கோவலன் கண்ணகியை நோக்கி அணுகிவரும் ஒவ்வொரு படியாக ஒவ்வொன்றும் யங்குகின்றது. நான்காம் அடி கண்ணகியின் இடையிலே இழைவதற்காக வளையும் கோவலன் கைகளின் வளைவு குழைவையே இசைப்படம் பிடிக்கிறது என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது.

அணுகி வந்த கோவலனின் பாராட்டுகள் அடுத்து வருகின்றன.