பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 15

அப்போதுதான் மறுமலர்ச்சி புதுமலர்ச்சியுற்றுப் புதுப் பொருள், புதுப் பண்புகளை நமக்கு எடுத்துக் காட்டும்.

மறுமலர்ச்சியும் சிலப்பதிகாரமும்

மறுமலர்ச்சிக்குரிய

தலைசிறந்த

நூல்

என்று

சிலப்பதிகாரத்தைக் குறிக்கும்போது, சிலரல்லர்,பலர் முகங்களில் வினா-வியப்புக் குறிகள் எழும்! திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைத் தாண்டியா சிலம்பு மறுமலர்ச்சிக்கு உயிர் நிலையானது என்று எதிர்க் குரல் எழுப்பத் தோன்றும்! ஆனால், அவர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. திருக்குறளும், தொல்காப்பியமும் என்றும் நிலவியவை - ஏட்டிலும், அச்சிலும் ஒருங்கே பயின்றவை. மறுமலர்ச்சி அவற்றுக்கு ஒளி தந்தது - அவற்றால் புத்தொளி பெறுகின்றது. ஆனால், மறுமலர்ச்சியை அவை தூண்டியிருக்க முடியாது. நேர்மாறாக, முன் பெரு வழக்காய் ல்லாது 19ஆம்

நூற்றாண்டுக்குப் பின் வெளி வந்த சங்க இலக்கியமும், முன் அருவழக்காகக்கூட இல்லாமல் புதையுண்டு கிடந்து அதே காலத்தில் வெளிவந்த சிலப்பதிகாரமும் மறுமலர்ச்சியைத் தூண்டிய பின்னரே, திருக்குறளும், தொல்காப்பியமும் புதுப்பொருள் தந்து புத்தொளி பிறக்குவிக்கலாயின. ஆகவே, சிலப்பதிகாரம், சங்க நூல்கள் ஆகிய இருதிற நூல்கள் மட்டுமே மறுமலர்ச்சியைத் தூண்டியவை ஆகும்.

இவற்றுள்ளும், சங்க இலக்கியம் புத்தறிவு தந்தது - புலவர்களிடையே! புத்தவா ஊட்டிற்று - தமிழ் ஆர்வலரிடையே! ஆனால், புலவரிடையே தவழ்ந்து, மாணவரிடம் கொஞ்சி, மக்களிடம் அது நடமாடவில்லை. அந்நிலை ஏற்படும் நாள் இனி வரலாம். சிலப்பதிகாரம் அதற்கு வழி செய்யலாம். ஆனால், இன்றே சிலப்பதிகாரம் அந்நிலையை அடைந்துவிட்டது, அடைந்துவருகிறது.

புலவர்கள் சிலப்பதிகாரத்தை அறியாத காலத்தில்கூட, புலவருலகம் இராமாயண பாரதச் சேற்றில் புரண்ட காலத்தில்கூட, பொது மக்கள் எப்படியோ இரண்டாயிர ஆண்டு கடந்தும் மறவாமல் கண்ணகியின் கதையைத் தெருக் கூத்தாகத் தொடர்ந்து நடத்திவந்தனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.