பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம் சிலம்புடன் மறுமலர்ச்சிக்குரிய தொடர்பு

49

சிலப்பதிகாரத்தின் முதல் பதிப்பு வெளிவந்தது 1892-ல்தான். அதை அருமுயற்சியால் வெளிக்கொணர்ந்தவர் முனைவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள். அப்பதிப்பு மீண்டும் 1920, 1927, 1944, 1950 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து மறு பதிப்புகளாக வெளிவந்தன.நான்காம் பதிப்புக் காலத்துக் குள்ளே வேறு வேறு உரைகள் தாங்கிய பதிப்புகள் - நாவலர் வேங்கடசாமி நாட்டார் (ஆகஸ்டு 1942, மார்ச்சு 1947, மார்ச்சு 1950), தமிழகப் பெரியார் ஆர்.கே.சண்முகம் (புகார்க் காண்டம் செப்டம்பர் 1946) ஆகியவர்கள் உரைப் பதிப்புகளும் வெளிவந்தன. சிலப்பதி காரத்தின் செல்வாக்கு வளர்ந்த வளர்ச்சியின் விசையினை இப்புள்ளி விவரங்கள் காட்டும். இவற்றுடன் சங்க இலக்கியப் பகுதிகளிலே முற்பட வெளியிடப்பட்ட புறநானூறு, பத்துப் பாட்டு ஆகியவற்றின் பதிப்பு விவரங்களை ஒப்பிட்டுக் காணுதல் பயன்தரக்கூடும். புறநானூற்றின் பதிப்புகள் 1884, 1923, 1935, 1936 ஆகிய ஆண்டுகளிலும் பத்துப்பாட்டு 1889, 1918, 1931 ஆகிய ஆண்டுகளிலும் புதுப்பிக்கப்பட்டன.

சிலப்பதிகாரத்துக்கும்

மறுமலர்ச்சிக்கும்

உள்ள

தொடர்பை இப்புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டும். ஆனால், இவைகூட அதை முழுவதும் விளக்க மாட்டா. ஏனென்றால், சிலப்பதிகாரம் வெளிவந்த பின்பும் தமிழக அரசியல் நிலை, கல்வி நிலை ஆகியவற்றைப் பொறுத்தே சிலப்பதிகாரம் படிப்படியாக மக்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்நிலைகளின் விளக்கமே மறுமலர்ச்சியின் விளக்கமும் வரலாறும் ஆகும்.

மேலை நாட்டு அறிஞர் ஊழி

திராவிட ஒப்பியல் மொழிநூல் இயற்றி மாளாப் புகழ் எய்திய மேலை நாட்டுத் திராவிட மொழி அறிஞரான டாக்டர் கால்டுவெல் சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வெளி வருமுன் வாழ்ந்தவர். ஆனால், அவற்றின் முதல் பதிப்புகள் வெளி வந்த பின் தமிழ்ப் பணி, தமிழ் இலக்கியப் பணிகளில் முனைந்தவர் டாக்டர்.ஜி.யூ.போப். அவர்கூடத் திருக்குறள், நாலடியார், திருக்கோவையார் ஆகிய நூல்களைத்தான் முழுதும் ஆராய்ந்து போற்ற முடிந்தது. சிலப்பதிகாரம் அவர் கண்களைக் கவரவில்லை.