பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம் - 15

பழைமை ஆராய்ச்சி அறிஞராகிய இவர்கள் சிலப்பதி காரக் காலத்தை அறியாது இருந்ததே அதில் அவர்கள் கவனம் செல்லாததற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கக்கூடும்; அது திருக்குறள், நாலடியார், திருக்கோவையார் ஆகிய வற்றுக்குப் பிற்பட்ட ஓர் அணிமைக்கால நூல் என்று அவர்கள் எண்ணி இருக்கக்கூடும்.

ஒரு நூலின் பெருமையைக் காலம் அளந்துவிடாது. பழைமை மட்டுமே அழகு தாராது.சிலப்பதிகாரத்தின் அருமை பெருமைகள் அது பாரதி காலத்ததாக,பாரதிதாசன் காலத்ததாக இருந்தால்கூடக் கெட்டுவிடமாட்டா. எனவே, பழைமைப்பற்று அற்ற இலக்கிய நுகர்வாளர்களாவது அதைப் போற்றிப் பாராட்ட முன் வந்திருத்தல் வேண்டும். ஆனால், இந்நிலையும் ஏற்படவில்லை. இரண்டாம் பதிப்பின் ஆண்டு (1920) இதைக் காட்டுகிறது. முதற்பதிப்பு கழித்து 28 ஆண்டுகள் வரை சிலப்பதிகாரத்துக்கு மறு பதிப்புத் தேவைப்படவில்லை.

அறிதுயில் காலம்

முதற்பதிப்பு வெளிவந்த பின்னும் சிலப்பதிகாரம் செல்வாக்கு அடையாததன் காரணம், அல்லது காரணங்கள் என்ன?

முதலாவதாக, எடுத்த இடமெல்லாம் காமச்சுவையே மலிந்த நைடதம் போன்ற நூல்கள் -பத்திப் பாசுரங்கள் இராமாயண பாரதங்கள் - கம்ப ராமாயண - பெரிய புராணங்கள் ஆகியவற்றுக்குள் புலவர்களும் மக்களும் சிறைப்பட்டு அமுங்கிக் கிடந்த காலம் அது!

இரண்டாவது காரணம், அனைத்திந்திய இயக்கமாக, காங்கிரசு தேசிய இயக்கமும் அனைத்துலக இயக்கமாகிய பிரமஞான இயக்கமும் தலையோங்கி நின்ற காலம் 20ஆம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளே. இரண்டு இயக்கத் தலைவர்களுக்கும் இயக்கங்களுக்கும் தமிழ் புறம்பானது. தமிழ் இலக்கியமோ அவர்களுக்கு எட்டாக் கனி. எட்டினாலும் வேண்டா வெறுப்புக்குரியது. அவர்கள் கருத்தார்வங்களையும், கனவார்வங்களையும், அவா ஆர்வங்களையும் தூண்டிய நாடு, மொழி, பண்புகள் வேறு. மக்களைத் தமிழகம், தமிழ், தமிழ்ப்