பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

51

பண்பு ஆகியவற்றின் திசையில் நாடாமல் வேறு திசைக்கு இழுத்தடித்துச் சென்றன அவ்வியக்கங்கள்!

மூன்றாவது காரணம் கல்வித் துறையின் சூழ்நிலை பற்றியது. ஆங்கிலக் கல்வியில் வங்கத்தைத் தாண்டித் தமிழகம் குதித்தோட முயன்ற காலம் அது. சென்னைப் பல்கலைக் கழகம் அப்போட்டியில் முனைந்து முன்னேறிற்று. ஆங்கிலக் கல்வி பெருகிற்று, அதுவும் ஆட்சிப் பிடியில் இருந்த அதிகார மக்க ளிடையேதான் பெரிதும் வளர்ந்தது. ஆங்கிலக் கல்வி முறையில் இன்றிருக்கும் அளவில் பத்தில் ஒரு பங்குகூட அன்று கல்லூரியிலோ, உயர்நிலைப் பள்ளிகளிலோ தமிழ் கிடையாது. இருந்த சிறிய அளவில்கூட அதைப் பயன்படுத்த இன்று தமிழகத்தில் எழுந்துள்ள புதிய பல்கலைக்கழகப் புலவர் கூட்டம் அன்று தோன்றவில்லை. பல்கலைக்கழகத்தில் புலவர் தேர்வுத் திட்டம் வாராத காலம் அது. அத்திட்டம் வந்த பின்னும் தமிழரிடையே ஒரு பெருங்கிளர்ச்சியினாலேயே அது தனித் தமிழ்த் திட்டமாக (7-டி பிரிவாக) அமைந்து தமிழ் வளர்ந்தது.

இத் திட்டம் இன்னும் தமிழகத்தில் தமிழ்க்கு மட்டும்தான் உண்டு-பிற திராவிட மொழிகளுக்கோ, ஏனைய தாயக மொழிகளுக்கோ இன்றும் இல்லை - அது பற்றி மற்ற எந்த மொழி மக்களும் கவலைப்படவில்லை; கனவுகூடக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

னர்.

இம் மூன்று இடையூறுகளால் சிலப்பதிகாரம் வெளி வந்தும் உயிர் பெறாது இருந்தது. பொது மக்கள் பாசுரங்கள், வடமொழிப் புராணங்களின் கதைக் கச்சேரிகளில் ஈடுபட் அந்நாளைய பட்டம் இல்லாப் புலவர்களுள் சிலர் - செல்வக் குடியில் பிறந்து சீரான வாழ்வுக்கு வழியுடைய சிலர் - கம்ப ராமாயணமோ, பெரிய புராணமோ பாடி மகிழ்ந்திருந்தனர்.

தமிழகம் அன்று தூங்கவில்லை - தூக்கத்தில் கனவுகள் எழக்கூடும். அவர்கள் அறிதுயிலில் அயர்ந்தனர் - அயல் பண்பாட்டில் மகிழ்ந்து தமிழ்ப் பண்பை மறந்திருந்தனர். இந்நிலையில்கூட அறிஞர் பேராசிரியர் மனோன் மணீயம் சுந்தரனார், செயற்கரிய செம்மல் டாக்டர் நடேசனார் ஆகியவர்கள் காலங்கடந்து தமிழ் பற்றிய கனவுக்காட்சிகள் கண்டனர். கவிஞர் பாரதியார் கனவில் இளங்கோவே