பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அப்பாத்துரையம் - 15

தோன்றியதுண்டு. ஆனால், அவர்கள் கண்டதை அவர்கள் காலத் தமிழர்கள் காணவில்லை. தமிழ் அறிவுத் துறைத் தலைவர் மறைமலை அடிகளும், தமிழ் மறுமலர்ச்சியின் தந்தை, கலைத் துறைத் தலைவர், சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களும் தமிழ் வாழ்வில் இடம் பெறும்வரை, புதிய தமிழக இயக்கங்கள் எழும்வரை, அத்தலைவர்களுக்காகவும் அவ் இயக்கங்களுக்காகவும் காத்துக்கொண்டு, தமிழினத்தின் கருவிலே சிலப்பதிகாரமும் மறுமலர்ச்சியும் தூங்கிக் கொண்டிருந்தன.

தமிழ் வாழ்க

தமிழ் இலக்கியமாகிய மேட்டு நிலத்திலே சங்க கால இலக்கியம் ஒரு பாரிய மலைத்தொடர். அதன் உயர மிக்க கொடு முடிகள் திருக்குறளும், தொல்காப்பிய மும், சிலப்பதிகாரமுமே ஆகும். திருக்குறளையும் தொல்காப்பியத்தையும்விடச் சிலப்பதிகாரக் கொடுமுடி உயரம் குறைந்ததே யானாலும், அவற்றில் தவழாத முத்தமிழ் "மாமுகில்" கள் அதில் தவழ்கின்றன. தவிர அதன் பாறைகள் திருக்குறள் தொல்காப்பியக் கொடு முடிகளைத் தாண்டி உயர்ந்து நின்ற பல பெருங் கொடு முடிகளின் சின்னங்களைத் தம்மகத்தே கொண்டுள்ளன. மின்புயல்களால் சிதறுண்ட அக்கொடுமுடிகள் தலை சாய்ந்து, உயரத்தில் சற்றுக் குறைந்தாலும், பண்பில் மற்றைய எல்லாக் கொடு முடிகளையும்விட உயர்வு உடையதாகவே காணப் படுகிறது.சிலம்புச் செல்வத்தின் இச்சீரிய வளப்பத்தை இருபதாம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டிலிருந்து ஓங்கி வளர்ந்த தமிழிசை இயக்கக் காலத்திலிருந்து தமிழகம் உணரத் தலைப்பட்டுள்ளது. ஆயினும், முழுச்சிறப்பையும் தமிழகம் இன்னும் உணரவில்லை. வருங்காலம் அதை உணர்விக்கவல்லது

எனலாம்.

தனித்தமிழ் இயக்கம்

மறைமலை அடிகளார் சங்க இலக்கியத்தில் கருத்துச் செலுத்தி, மாணவரிடையேயும் மக்களிடையேயும் அவற்றின் இயற்கை வழுவாத கலைப் பண்பினை ஒளி பரப்பினார். அவரது முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி ஆகிய