பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

53

தெள்ளிய தீந்தமிழ் ஆராய்ச்சி நூல்களும், அவற்றுடன் தொடர்புடைய சாகுந்தல ஆராய்ச்சியும் மாணவர் உலகில் கவிதை பற்றிய எண்ணங்களில் புரட்சி தூண்டின. அத்துடன் சமயத் துறையில் அவர் ஆரிய மத மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறிவு ஒளி பரப்பினார். சாதிக் கருத்துகளைப் பரப்பும் பிற்கால ஏடுகள் அனைத்தையும் - அவை சைவ ஏடு களாக இருந்தால்கூட அவர் சாடினார். ஆனால், இவற்றா லெல்லாம் மொழி உணர்ச்சி, அறிவு மலர்ச்சி ஏற்பட்டதே யொழிய கலைமலர்ச்சி ஏற்படவில்லை.

அடிகள்

சமயவாணராகவும்

கலைஞராகவும்

அறிஞராகவும் விளங்கினார். ஆனால், அறிவே மூன்றிலும் முனைப்பாய் இருந்தது. கலை அவர் உள்ளத்தில் இரண்டாம் இடமே பெற்றது. எனவேதான் தனித்தமிழ் இயக்கத் தந்தையாகிய அவர் மறுமலர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தாரே தவிர, மறுமலர்ச்சியின் நேரடித் தந்தையாக இயங்கவில்லை. தனித்தமிழ் ஊழி தாண்டி மறுமலர்ச்சி ஊழியிலும் அவர் வாழ்ந்தார். வாழ்ந்து மறுமலர்ச்சிக்குத் தூண்டுதல் தந்தார். மறுமலர்ச்சிக்கு வாழ்த்துரைத்து, அதன் வளர்ச்சி கண்டு தம் "நைந்த” உள்ளத்திலும் உள்ளூர மகிழும் அறிவார்ந்த தலைவராக மட்டுமே அவர் இயங்கினார்.

ஆர்வக் கவிஞர்

தனித்தமிழ் ஊழிக்கு முற்பட்டே மறுமலர்ச்சி ஆர்வம் காண்ட கவிஞர் பாரதி, மற்ற ஏடுகளின் பெருமையைப் போலவே, சிலம்பின் பெருமையை அவர் அறிந்து சுவைத்திருந்தார் என்பதை அவர் பாடல்கள் காட்டுகின்றன. 'யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன்போல், இளங்கோவைப்போல் பூமி தனில் யாங்கணுமே கண்டதில்லை.' 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு' என்ற தொடர்கள் இதை மெய்ப்பிக்கின்றன. சிலப்பதிகாரம் வெளிவந்தும் அதன் தேனினும் இனிய தீஞ்சுவைப் பண்ணைத் தமிழகம் கேளாத அந்த நாளிலேயே, அவர் அதைக் கேட்டார், அதில் ஈடுபட்டார் என்பதை நாம் காண்கிறோம். அதன் ஆற்றலை அவர், கம்பர், வள்ளுவர் ஆகிய இருவர் செவ்விகளுடன் ணைத்துக் கண்டார். து