பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

கம்பராமாயணமும் சிந்தாமணியும்

மணியின்

சுவை

55

கம்பராமாயணத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சீவகசிந்தா எவ்வளவு புதிதோ, அவ்வளவு சுவை இரண்டிலும் ஈடுபட்டவர்களுக்குப் பெருங்கதையிலும் சிலம்பிலும் புத்தம் புதிதாகத் தோற்றமளிக்க வல்லது.

கம்பரிடம் சொற்சுவை காணலாம். பொருட்சுவை காணலாம். ஆனால் இரண்டும் பாமர மக்களிடமிருந்து தொலைவானவை. புலவர் விளக்க விளங்குபவை அவை-அதுவும், புலவர்களுக்கே விளங்கிய பின்பும், அவை கவிஞர் திறம், விளங்கும் ஆசிரியப் புலவர் திறம் ஆகியவற்றைக் காட்டுபவை யாக அமையுமே அல்லாமல், இயற்கையோடு இசைந்த கலைஇன்பம் பயப்பவை ஆகமாட்டா. கலைத் துறையில் ஒரு சிறந்த வழக்குரைஞராகவும் சுவையுணர்வாளராக வும் விளங்கிய ஒரு டி.கே.சிதம்பரனார் தம் வாழ்நாள் முழுவதையும் மக்கள் உள்ளத்தைக் கம்பநாடகத்தில் ஈடுபடுத்துவிப்பதில் செலவிட்டபின்னும்கூட அது பொது மக்கள் உள்ளத்தில் உலவ மறுத்தே வருகிறது என்பது கண்கூடு. கம்பர் விழாக்கள், கம்பர் கழகங்களால் இந்நிலையை மாற்றி அமைக்கக் கூடவில்லை. கலைப்பண்பு மேதை டி.கே.சி., இரா.பி.சே. ஆகியவர்கள் நீங்கலாகக் கம்பநாடகப் பண்பு கண்ட தமிழர் கம்பர் கழகங்களில் இல்லாதிருப்பது இந்நிலைக்குரிய காரணங்களுள் ஒன்று எனலாம். அத்துடன் தனிப்பாடற் சுவையன்றி, கோப்பாக நூற்சுவை கம்ப ராமாயணத்தில் அமையாதிருப்பது மற்றுமொரு தனிக்காரணமாகும்.

கம்பராமாயணத்தைவிட எளிதாகக் கேட்பவர்களைக் கேட்கும்போதே இயக்கவல்லது சிந்தாமணி. அதன் சொற்சுவை கம்பரை மட்டுமன்றி எம்மொழிப் புலவரையும் தாண்டிச் செவிவழி சென்று சித்தத்தை மயக்கி இயக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால், அந்நூலின் சொற்சுவை எளிது; பொருட்சுவை ஆழமானது. தித்திப்புப் பூச்சினுள் செறிந்த வைரத்துண்டங்கள் சிந்தாமணிப் பாடல்கள். பத்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அதற்கிருந்த செல்வாக்கைக் கண்டு தனித் தனி புழுக்கமுற்ற பல குழுவினர் அப் புழுக்கத்தின் பயனாகவே கம்பராமாயணமும் பெரியபுராணமும் தோற்றுவித்தனர் என்பதையும், அவற்றாலும்