பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம் - 15

முழு வெற்றி காணாமல் பின்னும் கந்தபுராணம், திருவிளை யாடற் புராணம் முதலியவற்றில் ஈடுபட்டுப் போட்டியை வளர்த்தனர் என்பதையும் இன்று நாம் எளிதில் உணர முடிகிறது. இறுதியில் அவர்கள் போட்டியில் வென்றுள்ளனர் - ஆனால், இது கலைப் போட்டியில் அல்ல, சமயப் போட்டியிலேயே, சிந்தாமணி மக்களிடையே வழங்காமல் புலவர்களிடையே கூட அருங்கலச் சிந்தாமணியாய் இருப்பதனாலேயே, கம்பராமாயணமும் பெரிய புராணமும் 'கேள்வி' அளவிலாது தனிப்பெரு நூல்களாக இயங்குகின்றன.

பெருங்கதை - பேய்மொழி மூலநூல் - ‘ஆதி கவி’கள்

சிந்தாமணியுடனோ

கம்பராமாயணத்துடனோ, நேரடியாகப் போட்டியிட வல்ல நூலன்று, பெருங்கதை! ஆயினும், அவ்வேடுகளில் காண முடியாத பல அரும் பண்புகளின் சேமக்கலமாய் அஃது அமைகின்றது. அன்றியும் அந் நூல்களிலிருந்து சிலம்புச் செல்வத்துக்கு ஏறிச் செல்வதற்கான ஒரு படியாகவும் அஃது அமைந்துள்ளது.

தமிழகத்திலும் சரி, தமிழகத்துக்கப்பால் பரந்த கீழை நாடுகளிலும் உலக முழுவதிலும் சரி, இராமாயண பாரதங்கள் செல்வாக்குப் பெறுவதற்கு முன்பே, முதற்பெரும் செல்வாக்கும் மக்கட் பெரும்புகழும் உடைய நூல் பெருங்கதையே ஆகும். இது தமிழிலும் சமற்கிருதத்திலும் உலக மொழிகள் பலவற்றிலும் அக்காலத்திலேயே மொழிபெயர்த்தும் தழுவப்பட்டும் பரவிய ஒரு மாபெரிய ‘தாய்மொழிக் காவியமாகும்.

தொடக்கத்தில் பெருங்கதை எந்த மொழியில் எழுதப்பட்டதென்பதே நமக்குத் தெரிய வரவில்லை - முதனூல் மட்டுமன்றி அதன் மொழியும் இன்று தடமற்று அழிந்து போய்விட்டது.ஆனால், முதனூலாசிரியர் 'குணாட்டியர்' என்ற பண்டைப் பெரும் புலவர். அவர் எழுதிய மொழி ஆரிய அறிஞர் மரபில் 'பேய் மொழி' அல்லது 'பிசாசு மொழி' எனப்படுகிறது. இன்று சமற்கிருதவாணர் வால்மீகியை ‘ஆதிகவி' என்று கூறுவதுபோல, வால்மீகி காலத்திலும் அதற்கு முன்னும் இந்தக் 'குணாட்டியரே' 'ஆதிகவி' என்ற அரும்புகழ் உடையவராய் இருந்தார். பகவத் கீதையில் ‘கவிஞரிடையே நான் உஷனாகவி ‘