பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் - 15

பெருங்கதை, முத்தொள்ளாயிரம் ஆகிய இரண்டு நூல்களின் சிறப்புகளையும் ஒருங்கே கொண்ட - பாரகாவியப் பண்புடன் யாழிசையையும் இழைய விட்ட கலைச்செல்வம் சிலப்பதிகாரம்.

சிலம்பு நாடகமும் கம்ப நாடகமும்

ஆனால், சிலப்பதிகாரம் காவியமன்று, நாடகம். அதன் உயர் சிறப்பு இதுதான். அது நாடகக் காப்பியம்கூட அன்று. காவியத்தில் நாடகச் சுவை எழப் பாடப்படுவதே நாடகக்காப்பியம். இத்தகைய சுவை தமிழகத்தில் சிலப்பதிகாரக்காலத்திலிருந்து கம்பர் காலம் வரை நீடித்திருந்தது. கூர்ந்து கவனிப்பவர் அச்சுவையைக் கம்பராமாயணத்தில்கூடக்காணலாம்.நாடகச் சுவை அழிந்துபட்ட தமிழகத்திலே நாம் கம்பராமாயணத்தைக் காவியமாக மட்டுமே நுகர்ந்து வந்திருக்கிறோம். ஆனால், மலையாள நாட்டார் 12ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை ‘கம்பராமாயண நாடகம்' என்ற பெயரால் அதை நாடகமாகவே நடித்து வந்தனர் என்று மலையாள நாட்டு அறிஞர் கூறுகின்றனர். உண்மையில் 12ஆம் நூற்றாண்டுவரை சிலப்பதிகாரத்தை நாடகமாக நடத்தி வந்த மலையாள நாட்டு நடிகர் குழாம் புதிய கம்ப ராமாயணத்தையும் அதே முறையில் அமைத்து நாடகமாக நடிக்கத் தொடங்கினர் என்று தோன்றுகிறது.பண்டைத் தமிழகச் சிலம்பின் பண்பு அதே தமிழகத்தில் தோன்றிய கம்பர் காவியத்திலும் பின்னணியில் மறைந்திருந்ததை மலையாள மக்கள் கண்டுணர்ந்தனர் தமிழகம் இரண்டையும் இனித்தான் கண்டுணருதல் வேண்டும்.

-

சிலம்பின் நாடகப் பண்பு -பெறும் புகழுரை புனைந்துரை அல்ல-அஃது உண்மையில் நாடகமே. கீழை நாட்டு நாடகக் கலையின் தலையூற்றே என்பதை நாடக இலக்கிய வரலாறு - கீழை உலக மேலையுலக நாடக இலக்கிய வரலாறு தெள்ளத் தெளியக் காட்டவல்லது. அவ்வரலாறுகளைத் துருவிச் சிலம்பின் நாடகப் பண்பு காண முனைவோம்.

தமிழ் போன்ற தனி மொழிகளின் இலக்கியமே கடல் போன்றது. உலக இலக்கியமோ கடல்கள் அடங்கிய மாக்கடல் - வெளி மாகடலாகிய வானவெளி, அண்டவெளி போன்று எல்லையற்றது. இந்த உலக இலக்கியத்திலே காவியம், உணர்ச்சிக்

-