பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 15

ஆங்கில நாடக இலக்கியம் வளர்த்த நாடகாசிரியர்கள் பலர்-ஆனால், உலக நாடகத்தில் இடம் பெறத்தக்க நாடகங்கள் ஷேக்ஸ்பியரின் நாடகங்களே. அவர் இயற்றிய முப்பதுக்கு மேற்பட்ட நாடகங்களில் உலக அரங்கிலே பத்துக்கு மேற் பட்டவை இடம் பெறத்தக்கன.

கிரேக்க நாடகங்கள் வீறியல் அல்லது துன்பியல் நாடகங்கள் (Tragedies) என்றும், இன்பியல் அல்லது களிநாடகங்கள் (Comedies) என்றும் இரு பிரிவுகளாக இயன்றன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்றுக்குக் குறையாத தலைசிறந்த நாடகக் கலைஞர்கள் தலைசிறந்த பல நாடகப் படைப்புகள் ஆக்கித் தந்துள்ளனர். அவற்றுள் பெரும்பாலானவை உலக நாடக இலக்கியத்திலே நிலையான இடம் பெறத்தக்கன.

நாடக இலக்கியத்திலே சமற்கிருத மொழியின் சிறப்பு மற்ற இரு மொழிகளையும் தாண்டியது என்பதற்கு ஐயமில்லை. ஏனென்றால், உலகின் தலைசிறந்த நாடகக் கவிஞர் வரிசையில் சமற்கிருதத்துக் கவிஞர் தொகையும் பெரிது. அதுபோல் உலகின் தலைசிறந்த நாடக வரிசையிலும் அதற்குரிய நாடகங்கள் பல. இன்றைய அமெரிக்க, மேலை நாட்டு நாடக அரங்குகளிலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களுடனும், பிரெஞ்சு கிரேக்க நாடகங் களுடனும் போட்டியிடும் பெருமை 'சாகுந்தலம்' ‘மண்ணியல் சிறுதேர்' (மிருச்சகடிகம்) முதலிய சமற்கிருத நாடகங்களுக்குக் கிட்டியுள்ளன.

நான்காம் மரபு : தமிழ் மலையாள நாடகக் கலை

இம்மூன்று நாடக மரபுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந் தவர்கள் ஒரு விசித்திர உண்மையை நமக்குத் தெரிவிக்கின்றனர்.

மேனாட்டு நாடக மரபில் கிரேக்க மரபே ஐரோப்பா வெங்கும் பெரிதும் பின்பற்றப்பட்டு வந்தது. பிரெஞ்சு நாடக ஆசிரியர்கள் உலக நாடக அரங்கில் முதலிடம் பெற்றவர்களே யானாலும் அவர்கள் கிரேக்க மரபைப் பின்பற்றியே கலை வளர்த்தனர். ஆகவேதான், அவர்கள் தரத்துக்கேற்ற அளவில் அவர்களது நாட்டு மொழி நாடக இலக்கிய உலகில் சிறப்புப் பெற முடியவில்லை. ஆனால், ஆங்கில நாட்டு நாடக மரபு, சிறப்பாக ஷேக்ஸ்பியர் மரபு, கிரேக்க மரபைப் பின்பற்ற வில்லை.