பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

61

ஆங்கில மண்ணிலேயே பிறந்து வளர்ந்த தனி மரபாக, இயற்கை மரபாக அது தனிப்பெரும் புகழ் நாட்டிற்று.

சமற்கிருத நாடக மரபு மேலை நாட்டில் உணரப் பட்டபோது, அதனை அறிஞர் ஆங்கில கிரேக்க மரபுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அது கால எல்லையிலும் எல்லையிலும் அருகில் உள்ள கிரேக்க நாட்டு மரபுடன் ஒரு சிறிதும் ஒவ்வாமல் இரண்டிலும் தொலைவாக உள்ள ஷேக்ஸ்பியர் கால ஆங்கில மரபுடன் ஒத்திருக்கக் கண்டனர்.

கிரேக்க மரபின் தனிச்சிறப்பு துன்பியல் இன்பியல் என்ற பிரிவினையே. இவை இரண்டும் கிரேக்கர் கண்களில் நாடகக் கலையின் இரு பிரிவுகளாகக் கூடத் தோற்றவில்லை. இருவேறு தனிக்கலைகளாகவே இயங்கின. ஆனால், ஆங்கில மரபில் இப்பிரிவினை இல்லை. அது போலவே சமற்கிருத மரபிலும் இப்பிரிவினை இல்லை.

அருகில் இன்றி,

காலத்தாலும்

இடத்தாலும் தொலைப்பட்டு வேறு வேறான இந்த இரு மொழிகளும் காட்டிய ஒற்றுமை கண்டு கலையாராய்ச்சியாளர் வியப்பும் மலைப்பும் அடைந்தனர். ஆயினும், கிரேக்க மரபு இடையே கிரேக்க வாழ்வில் எழுந்த ஓர் செயற்கை மரபே என்றும், ஆங்கில சமற்கிருத மரபுகள் அச் செயற்கை மரபுக்கு முன்னும் பின்னும் வளர்ந்து பரவிய ஓர் உலகளாவிய இயற்கைப் பொது மரபே என்றும் விளக்கம் கூறி அவர்கள் ஓரளவு அமைதி கண்டனர்!

தன்னாட்டின் பக்கம் உலகக் கலை ஆராய்ச்சி அறிஞர்களின் கண்கள் திரும்பக் கூடுமானால், அவர்கள் விளக்க அமைதி சின்னபின்னம் அடைந்திருப்பது உறுதி. ஏனெனில் இங்கே, வெளியுலகம் இன்னும் விளக்கமாக அறியாத ஆனால் ‘கதைகளி' மூலம் ஒரு தும்பு வடிவில் உலக அரங்குக்கு எட்டியுள்ள நான்காவது நாடக மரபு ஒன்று தொன்று தொட்டு இன்று வரை இயங்கி வருகிறது என்பதைக் காண்பர்.

-

இதுவே தமிழ் மலையாள நாடக மரபு. மறைந்த பண்டைத் தமிழ் நாடக மரபின் தமிழகக் கிளை பட்டுவிட்டதாயினும், பட்டழியாத கிளையாக மலையாள நாடகமரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அணையா விளக்காய் நிலவுகின்றது.