பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் - 15

அடிக்கடி அணையும் நிலையில் புயலில் சிக்கி வலிகுன்றி வாடினும் பட்டுவிடாமல் அது நம் காலம்வரை தொடர்ந்து வந்து நமக்கு எட்டியுள்ளது.

மீட்டும் பதிய புதிர்

இந்த மலையாள மரபில் ஒரு தனித் தன்மையுண்டு. அதில் சாக்கியர் கூத்து (தமிழ், சாக்கையர் கூத்து) ஓட்டந்துள்ளல் என்ற இருவேறு வகைப்பட்ட நாடகக்கலை வகைகள் தனித்தனி வேறு வேறாக நின்று நிலவி வருகின்றன. கூர்ந்து நோக்கினால் எல்லா வகைகளிலும் சாக்கியர் கூத்து கிரேக்கத் துன்பியல் நாடகத்தை யும், ஓட்டந்துள்ளல் கிரேக்க இன்பியல் நாடகத்தையும் ஒத்திருப்பவை ஆகும்.

ஆங்கிலமரபும் - சமற்கிருதமரபும் இயற்கைமரபுகள் என்றனர் உலக அறிஞர். இடையே கிரேக்கமரபு செயற்கைமரபாக எழுந்தது என்று அவர்கள் கூறியமைந்தனர். இப்போலி விளக்க அமைதியைக் கேலி செய்கிறது, புதிதாக நாம் காணும் இப் பழைய தென்னாட்டு மரபு! ஏனென்றால் கால இடம் கடந்த காரணத்தால் ஆங்கில சமற்கிருத மரபுகள் இயற்கை உலக மரபுகளானால், அதுபோல, கால இடம் கடந்த காரணத்தால் கிரேக்க, தென்னாட்டு மரபுகளும் இயற்கை உலக மரபுகளே என்று ஏற்படுகிறது.

-

இது மட்டுமன்று, உலகின் மற்றொரு கோடியில் சீன, ஜப்பானிய நாடக மரபுகள் உள்ளன. இன்னும் வேறொரு கோடியில் ஜாவா, மலாயா, இலங்கை முதலிய தென்கிழக்காசிய நாடகமரபுகள் உள்ளன. இவை கிரேக்க தன்னாட்டு மரபுடனும் தொடர்புடையவையாய், இரண்டையும் முற்றிலும் ஒவ்வாது ஒரு சார் ஒத்து இயங்குகின்றன. ஆகவே, உலக முழுவதும் நாடக மரபு அடிப்படையில் ஒன்றே என்றும், அவற்றின் வேறுபாடுகள் வளர்ச்சி வேறுபாடுகள், சூழல் வேறுபாடுகளால் ஏற்பட்டவையே என்றும் விளங்குகிறது.

ம்

அப்படியானால் காலமும் இடமும் கடந்து கி.பி.5ஆம் நூற்றாண்டுக் காலச் சமற்கிருத மரபும் 16ஆம் நூற்றாண்டுக் கால இங்கிலாந்து மரபும் ஒன்று படுவானேன்? மற்றொருபுறம் கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குரிய கிரேக்க மரபும் கிட்டத்தட்ட