பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

63

அதே காலத்திலிருந்து கி.பி.18ஆம் நூற்றாண்டு கடந்து இன்று வரை நிலவும் தமிழ் - மலையாள மரபும் ஒன்றுபடுவானேன்?

இது நாடகக் கலையுலகின் ஒரு பெரும் புதிர் ஆகும்.

ஓர் உலகம் : ஒரே உலக மரபு

உலக நாடக இலக்கிய மரபை ஒரே மரபாகக் கொண்டு அதன் வளர்ச்சியை ஆராய்ந்தால், இந்தப் புதிர்க்கு விளக்கம் காணலாம். இம்முயற்சி உலகப் புதிர் ஒன்றை விளக்குவது மட்டுமன்று, சிலப்பதிகார காலத் தமிழ் நாடகப் பண்பையும் நன்கு படம் பிடித்துக் காட்டுவதாகும். வேறு வேறு திசையில் உலகில் வளர்ந்த நாடகப் பண்புகளெல்லாம் சிலப்பதிகாரத் தமிழ் நாடக மரபிலிருந்து கிளைத்த பல்வேறு கிளை மரபுகளேயாகும் என்பது அப்போது விளங்கும். அத் தமிழ்மரபு இருவேறு வகைப்பட்ட ஆங்கில - சமற்கிருத மரபையும் கிரேக்க மலையாள மரபையும் விளக்குவதுடன், சீன - ஜப்பான், இலங்கை, மலாயா, ஜாவா மரபுகளுக்கும் நல்ல விளக்கத் தெளிவு தரக்கூடும்.

நாடகக்கலை எங்கெங்கே எவ்வாறு தோன்றிற்று? எப்படி வளர்ந்தது? பல நாடுகளிலும் அதன் தோற்ற வளர்ச்சி வரலாறு களை அறிஞர் ஆராய்ந்து வருகின்றனர். உலக அடிப்படையில் நாடக வரலாற்றை அறிய அவர்கள் முடிவுகள் மிகவும் பயன்படுவன.

பல நாடுகளில் நாடகப் பண்புகளின் தோற்ற

வளர்ச்சிகளைச் சமயவினை முறைகள், விழாக்கள் சுட்டிக் காட்டு கின்றன. இக்காரணத்தால் நாடகம் சமயத் துறையிலிருந்தே தோன்றி வளர்ந்தது என்று சிலர் கூறத் துணிகின்றனர். ஆனால், இது முற்றிலும் சரியன்று. ஏனென்றால், நாடகம் ஒரு கலை. மக்கள் வாழ்க்கையோடு ஒட்டிய கலை. இன்றுகூட அதன் வளர்ச்சியை வாழ்க்கைத் துறையிலேயே நாம் காண முடியும். சமயத்துறையில் மட்டுமன்று, இலக்கியத் துறையில்கூட நாம் அதன் உயிர் வளர்ச்சியை முற்றிலும் காண முடியாது. அதன் நிழலைமட்டுமே காண்கிறோம்.

இக்காரணத்தினாலேயே நாடக மேடை ஏறாதவர், மேடை அனுபவம் இல்லாதவர் எழுதும் நாடகம் நாடகக் காப்பியமாக