பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் - 15

மட்டுமே இருக்கும். மேடையில் இயங்கும் உயிருள்ள வளர்ச்சிப் பண்புள்ள நாடகமாயிராது.

மிகப் பல நாடுகளில் பழைமையான நாடக இயல்பை ஆராய்ந்தவர்கள் அது நாட்டியத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையதென்றும், நாட்டியத்திலிருந்தே தோன்றி, அதனுடன் நெடுநாள் இயைந்தே இயங்கிற்றென்றும் கூறுகின்றனர். தமிழிலும் சமற்கிருதத்திலும் நாடகம், நாட்டியம் என்ற சொற்கள் நெருங்கிய சொல் தொடர்பும் பொருள் தொடர்பும் உடையன. புலவர் பலர் இன்றளவும் நாடகம் என்ற சொல்லை நாட்டியம் என்ற பொருளிலே வழங்கியும் வருகின்றனர்.

உலக நாடகப் பண்பின் பழைமை

சமயத்துறையில் பல மொழி மூலங்கள், எழுத்து மூலங்கள், புதைவடிவச் சின்னங்கள் ஆகியவை உலக நாடகப் பண்பின் பழைமையைச் சுட்டிக் காட்டுகின்றன.

புராணங்களில் கூற்றுவன்(இயமன்) உயிர் கொண்டேகும் தெய்வம் மட்டுமல்லன். ஆரியரின் அறக்கடவுள் அல்லது தரும தேவதை அவனே. இருக்கு வேதத்தில் அவன் காதல் கதை ஓர் உரையாடல் வடிவில் காட்சியளிக்கின்றது. இயமன்-இயமி இரட்டைப்பிள்ளைகள். அண்ணன் தங்கையர். ஆனால், இயமன் இயமியையே காதலிக்கிறான். இயமி இத்தொடர்பு தகாது என்று கூறி ஊடுகிறாள். கதை முடிவை இருக்கு வேதம் தெளிவாக்க வில்லை. ஆனால், உரையாடலின் போக்கும் பிற்காலப் புராணமும் இயமன் காதல் வெற்றியையே தெரிவிக்கின்றன. ஆரியர் நீதிக் கடவுள் தங்கையையே மணந்துகொண்டு வாழ்கிறார்.

சமற்கிருதவாணர்

பலர் சமற்கிருத நாடகத்தின் கருமூலத்தை இந்த இருக்குவேத உரையாடலில் காண்கின்றனர்.

கிறித்தவர்களுக்கும் யூதர்களுக்கும் விவிலிய நூலின் பழைய ஏற்பாடு பொதுவான திருநூல் ஆகும். அதில் யோபுவின் ஏடு நாடகப் பண்பு கனிந்த கதை கூறுகின்றது. நன்மகனாகிய யோபுவின் உயர்வைக் காட்ட இறைவன் அவனுக்குத்