பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிலம்பு வழங்கும் செல்வம்

65

க்

துன்பத்தின்மேல் துன்பம் அனுப்புகிறார். துன்பத்தின் காரணம் அவன் பழம் பழிகளே என்றும், கடவுளிடம் மன்னிப்பு கோரும்படியும் அறிஞர் சிலர் யோபுவுடன் வாதிடுகின்றனர். இறுதியில் இறைவனே அவன் துன்பங்களை அகற்றுகிறார்.

இருக்கு வேத உரையாடலும் விவிலியக் கதையும் மூவாயிர ஆண்டு பழைமையுடையன. இவற்றினும் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு நாடகப் பண்பை மொகஞ்சதாரோ முத்திரை ஒன்று காட்டுகிறது. இதில் பல விலங்குகளின் நடுவே, கொம்புகளுடன் சிவபெருமான் போன்ற தெய்வ உருவம் காட்சியளிக்கிறது. சிவபெருமான் பசுபதி, எல்லா உயிர்கட்கும் இறைவன் என்ற சைவக் கருத்தை இக்காலச் சைவர் கண்டு வியக்கும் வகையில் இது புதுவகை விளக்கம் தருகிறது.

இம் மூன்றும் மனித நாகரிகத்தில் நாடகப் பண்பின் பழைமையைச் சுட்டிக் காட்டுகின்றனவேயல்லாமல், அதன் தோற்ற வளர்ச்சிகளை விளக்கவில்லை. அவற்றை விளக்க உதவும் துறை, விழாக்களே. ஆனால், விழாக்கள் சமயத்துறை சார்ந்தவை மட்டுமல்ல. சமுதாயத்துறையையும் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

விழாக்கள் காட்டும் நாடகக் கலை வளர்ச்சி

இசுலாமியரின் ஒரு கிளையினரான ஷியாக்களின் பண்டிகை ஒன்று 'ஆடு-புலி'ப் போராட்டமாக இயங்குகிறது. பாரசீகத்திலும் சிந்து கங்கை வெளியிலும் தென்னாட்டிலும் இப் பண்டிகை விழா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில் ‘ஆடு’ அமைந்த இனிய பண்புகளை உடைய நபிகள் நாயகத்தின் மருமகனான ‘அலி'யையும் அவர் பெயரன் ஹுசேனையும், 'புலிகள்' அவரை மாய்த்த அவர் எதிரிகளையும் குறிப்பவை. இம்முறையில் முன்னாள்களில் நடிக்கப்பட்ட சமய நாடக ஊர்வலம் இன்று நாடகப் பண்பு தேய்ந்து, வெறும் வேடிக்கை விழா ஆகியுள்ளது.

தமிழக விழாக்களும் புராணக் கதைகளின் நாடக விளக்கமாகத் தொடங்கியவையே. சுந்தரமூர்த்தி நாயனார்க்குச் சிவபிரான் தூது சென்றது, மாணிக்க வாசகர்க்காக அவர் மண் சுமந்து அடிபட்டது ஆகிய காட்சிகள் விழாக்களில் நாடகப்