பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

சமற்கிருத மரபு

அப்பாத்துரையம் - 15

ஆங்கில நாடகத்துக்கும் கிரேக்க நாடகத்துக்கும் இடைப்பட்ட காலத்தது சமற்கிருத நாடகம். கிரேக்க நாடகத்துக்கும் இதற்கும் ஒரு தொடர்பு உண்டு. சமற்கிருதத்தில் திரையைக் குறித்த சொல் 'யவனிகா' என்பது. சமற்கிருத நாடக காலத் தொடக்கத்தில் கிரேக்கரிடமிருந்தே 'திரை'யிடும் வழக்கம் கீழ்நாட்டில் பரவிற்று என்பர் மேனாட்டு அறிஞர் சிலர்.ஆனால், கிரேக்க நாடகத்தில் திரையே கிடையாது என்பதை அவர்கள் கவனிக்கவில்லை. அதைக் கண்ட வேறு அறிஞர் சிலர், திரைத் துணி கிரேக்க நாட்டிலிருந்து வந்ததாயிருத்தல் வேண்டும் என்று திருத்த விளக்கம் தந்தனர். உண்மையில் யவனரின் அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த திரையே யவனிகா என்று பெயர் பெற்றிருக்க இடமுண்டு. ஏனெனில், தமிழில் அஃது எழினி, அதாவது எழில் உடையது என்று பெயர் பெற்றிருந்தது. எழில் என்ற கருத்துடைய ஆகு பெயராக ‘யவனம்’ சமற் கிருதத்தில் வழங்கிப் பின் ‘யௌவன'மாக மாறியிருக்கலாம்.

சமற்கிருத நாடகங்களில் நாம் எத்தனை சமயத்துறைத் தாடர்பையும் காணமுடியவில்லை. அதன் கதைகள் பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளாக இருந்தன.ஆனால், அது கோவில் புரோகிதரால் ஆடப் பெறவில்லை. அரசர் அவைகளிலும் செல்வர், பண்டிதர் மன்றங்களிலுமே ஆடப்பட்டது. புரோகித வகுப்பு அதில் உயர் இடம் பெற்றது. புரோகிதராக அன்று, அரசனுடன் தொடர்புடைய ய உயர்குடியினராக நாடக அரங்கில் அவர்கள் உயர் இடம் பெற்றனர். ஆனால், அத்துடன் அவர்கள் பெற்ற இடமும் தலைமையிடமன்று, கோமாளியின் இடமும் அரசவைப் பாங்கனின் இடமும் மட்டுமேயாகும்.

இன்பியல், துன்பியல் என்ற இரு வேறு கலைகளாகச் சமற்கிருத நாடகம் இயங்கவில்லை. ஆனால், நாடக இலக்கணம் கூறிய ஏடுகள், பத்துக்கு மேற்பட்ட நாடக வகைகளைக் குறிக்கின்றன. இவற்றுள் இன்பியல் வகையான களியாட்ட நாடகம் (ப்ரஹஸனம்), நாடகக் காப்பியம் (ச்ராவ்ய நாடகம்), காட்சி நாடகம் (ரூபகம்) ஆகியவை இடம் பெற்றன. ஆயினும், இலக்கியத்தில் பெரிதும் வழங்கிய வகை காட்சி நாடகம் ஒன்றே.